»   »  விஜய் அரசியலுக்கு வருவாரா என எனக்கு தெரியாது.. அவர் நல்ல நடிகர்! - எஸ்ஏ சந்திரசேகர்

விஜய் அரசியலுக்கு வருவாரா என எனக்கு தெரியாது.. அவர் நல்ல நடிகர்! - எஸ்ஏ சந்திரசேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: விஜய் அரசியலுக்கு வருவாரா என்று எனக்குத் தெரியாது. அவர் நல்ல நடிகர் என்று எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்ற தீவிர விஜய் ரசிகர் சமீபத்தில் விபத்தில் இறந்துவிட்டார். அவரது ஏழ்மையான குடும்பத்துக்கு உதவி செய்யுமாறு விஜய்க்கு கோரிக்கை வந்தது. இதைத் தொடர்ந்து விஜய் சார்பில் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன், திருவனந்தபுரம் போய் ஸ்ரீநாத் குடும்பத்துக்கு நிதி உதவி செய்தார்.

SA Chsndrasekar's comment on Vijay politics

அப்போது தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் எஸ்ஏ சந்திரசேகரன் பேசுகையில், "விஜய்யின் அரசியல் முடிவு பற்றி எனக்கு தெரியாது. அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

அவர் தற்போது சினிமாவில் நல்ல நடிகராக உள்ளார். அவர் நடித்து வெளியாகி உள்ள 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றி இடம் பெற்றுள்ள வசனம் மற்றும் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அந்த எதிர்ப்புகளை தாண்டி 'மெர்சல்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது," என்றார்.

English summary
Director SA Chandrasekar says that he don't know anything on Vijay's political entry
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos