For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சமந்தா வில்லி இல்லையாம்.. தளபதி 67 படத்தின் கதையே வேறயாம்.. வெயிட்டான LCUவா வரப் போகுதா?

  |

  சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 450 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இப்படியொரு படத்தைக் கொடுத்த நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் மீது ஒட்டுமொத்த திரைத் துறையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

  நடிகை சமந்தா இந்த படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்த தகவல்களும் கசிந்துள்ளன.

  தொடரும் ’விக்ரம்’ வெற்றிக்கூட்டணி..கமலுடன் மீண்டும் இணையும் ஃபஹத்பாசில்தொடரும் ’விக்ரம்’ வெற்றிக்கூட்டணி..கமலுடன் மீண்டும் இணையும் ஃபஹத்பாசில்

  மிஸ்ஸான மாஸ்டர்

  மிஸ்ஸான மாஸ்டர்

  கைதி படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. அதற்கு ஏற்றார்போல மாஸ்டர் படத்தின் முதல் பாதி வெறித்தனமாக இருந்த நிலையில், அதன் இரண்டாம் பாதியில் வில் அம்பு விட்டு லாரிகளை கவிழ்க்கும் சண்டைக் காட்சிகளை எல்லாம் வைத்து படத்தை ஒட்டுமொத்தமாக சொதப்பி விட்டனர். கடைசியாக மாஸ்டர் 50 சதவீதம் லோகேஷ் படம், 50 சதவீதம் விஜய் படம் என சொல்லி எஸ்கேப் ஆகி விட்டார் லோகேஷ் கனகராஜ்.

  பீஸ்ட்டுக்கு பிறகு மாற்றம்

  பீஸ்ட்டுக்கு பிறகு மாற்றம்

  டாக்டர் படத்தை இயக்கி ஹிட் அடித்த நெல்சன் திலீப்குமாரை அழைத்து பீஸ்ட் பண்ணச் சொன்னார் விஜய். ஆனால், அந்த படத்திலும், ஹீரோவின் தலையீடு அதிகளவில் இருப்பதாக படம் வெளியாகும் முன்னரே நெல்சன் பேட்டி கொடுத்து இருந்தது படம் வெளியாகி தோல்வியை தழுவிய நிலையில், பெரும் பஞ்சாயத்தாக முடிந்தது. இந்நிலையில், எந்தவித தலையீடும் இல்லாமல் தளபதி 67 படம் 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாக வரும் என லோகேஷே பல பேட்டிகளில் பேசியுள்ளார்.

  LCU

  LCU

  விக்ரம் படத்தில் கைதி படத்தில் இருந்த கதாபாத்திரங்களையும் கதையையும் ஒன்றாக இணைத்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கி இருந்தார். இந்நிலையில், தளபதி 67 திரைப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் தான் என்பதை அவரிடமே சிலர் பேட்டிகளில் போட்டு வாங்கி இருக்கின்றனர். விக்ரம் 3 படத்திற்கு முன்னதாக மிகப்பெரிய ஹீரோக்களையும், வில்லன்களையும் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் டிசி ரசிகரான லோகேஷ் கனகராஜ்.

  சமந்தாவுக்கு என்ன ரோல்

  சமந்தாவுக்கு என்ன ரோல்

  தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா கன்ஃபார்மாக நடிக்கப் போகிறார் என ஸ்ட்ராங்கான பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், அவர் விஜய்க்கு வில்லியாக நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், தற்போது இந்த படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்க உள்ளதாகவும், போலீஸ் அதிகாரியாகத்தான் சமந்தா வரப் போகிறார் என்றும் தற்போது லேட்டஸ்ட் அப்டேட்கள் கிடைத்துள்ளன. ஆனால், இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  செட்டாகுமா

  செட்டாகுமா

  தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கதாபாத்திரத்தில் படு மிரட்டலாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து இருந்தார் சமந்தா. உடல் எடையை முற்றிலுமாக வொர்க்கவுட் செய்து குறைத்து செம ஃபிட்டாக வைத்துள்ள சமந்தா காப் ரோலுக்கு கச்சிதமாக பொருந்துவார் என்றே கூறுகின்றனர். பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தளபதி 67 மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் சமந்தா வருவாரா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி தான்.

  விஜய் வில்லனா

  விஜய் வில்லனா

  சூர்யாவை பயங்கர வில்லன் ரோலக்ஸாக லோகேஷ் கனகராஜ் மாற்றி உள்ள நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்யை முழுக்க முழுக்க கிரே ஷேடிலேயே காட்டப் போகிறாரா லோகேஷ் கனகராஜ் அல்லது ராயப்பன் போல நல்ல ரவுடியாக காட்டப் போகிறாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். பிரியமுடன் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் முழுக்க முழுக்க வில்லனாக நடிக்க முதலில் அவர் ஓகே சொல்வாரா? என்பதே பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

  English summary
  Samantha will play cop role in Thalapathy 67 strong buzz trending in Cinema Industry. Lokesh Kanagaraj tries to do a LCU movie for Actor Vijay, but there is no official updates are statement about Thalapathy 67 till date.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X