For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அத்தைய.. அத்தைன்னு கூப்டுங்கடி.. கலக்கல் சந்தானம் இஸ் பேக்.. வெளியானது டிக்கிலோனா டிரைலர்!

  |

  சென்னை: நிர்வாணமாக போஸ் கொடுத்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு அதிர வைத்த நடிகர் சந்தானத்தின் டிரிபிள் ஆக்‌ஷன் டிக்கிலோனா படத்தின் கலக்கலான டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

  எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக மாஸ் பிரார்த்தனை.. எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமான வீடியோ!

  சந்தானம் ஹீரோவான பிறகு அவரது படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருப்பதாகவே ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

  ஆனால், சமீபத்தில் வெளியான பிஸ்கோத் மற்றும் தற்போது வெளியாகி உள்ள டிக்கிலோனா படங்களின் டிரைலர்களை பார்த்தால், நிச்சயம் காமெடிக்கு 100 சதவீதம் கியாரண்டி என்றே சொல்லத் தோன்றுகிறது.

  'தைரியம் கிடைத்திருக்கிறது' பிரபல இயக்குனருடன் நடிகை ரியா பேசியது என்ன? லீக் ஆனது வாட்ஸ்அப் சாட்!

  டிக்கிலோனா டிரைலர்

  இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், ஹர்பஜன் சிங், யோகி பாபு, அனகா, ஷிரின் கான்ச்வாலா, ஆனந்த் ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷா ரா, இட்டிஸ் பிரசாந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி உள்ள டிக்கிலோனா படத்தின் ஃபன்டாஸ்டிக் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.

  டைம் மெஷின்

  டைம் மெஷின்

  2027ம் ஆண்டு டைம் மெஷின் கண்டு பிடிப்பதாக தொடங்கும் டிரைலரின் ஆரம்ப காட்சியில் இருந்து 2020ம் ஆண்டு தனது திருமணத்தை நடத்த நடிகர் சந்தானம் அந்த கால இயந்திரத்தில் பயணப்படுவது என கலக்கல் கதையுடன் டிரைலர் ரசிகர்களை கவர்கிறது. இன்று நேற்று நாளை படத்திற்கு பிறகு மற்றும் ஒரு டைம் மெஷின் படம் தமிழில் விரைவில் ரிலீசாக உள்ளது.

  யுவன் சங்கர் ராஜா

  யுவன் சங்கர் ராஜா

  சந்தானத்தின் இந்த படத்திற்கு இளைஞர்களின் இதய துடிப்பை நன்கு அறிந்து வைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்பதால், பிரம்மாண்ட பின்னணி இசையும், பாடல்களில் தனது தனித்திறமையையும் இஷ்டத்துக்கு களமிறக்கி இருக்கிறார் என்பது இந்த ஒரு நிமிட டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

  சந்தானம் இஸ் பேக்

  சந்தானம் இஸ் பேக்

  தனது பஞ்ச் காமெடிகளால் ரசிகர்களை அட போட வைக்கும் சந்தானம் மீண்டும் இந்த படத்தின் மூலம் கம்பேக் ஆகி உள்ளார் என்றே சொல்லலாம். கடைசி காட்சியில் மூன்று சந்தானங்கள் ஒரே காட்சியில் வந்து நின்று, நான் இபி மணி, இவன் மாப்பிள்ளை மணி, நீ யாருன்னு கேட்கும் போது கவுண்டமணி என சரியான கவுன்ட்டர் கொடுக்கிறார்.

  அத்தைய.. அத்தைன்னு கூப்டுங்கடி

  அத்தைய.. அத்தைன்னு கூப்டுங்கடி

  திருமணம் ஆகும் பெண்களுக்கு செம அட்வைஸ் பன்ச்சாக வரும் அந்தவொரு வசனம் தான் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று பதிந்து வேற லெவலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘அத்தைய.. அத்தைன்னு கூப்டுங்கடி.. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி அம்மான்னும்.. கல்யாணத்துக்கு பின்னாடி அடிச்சிக்கின்னும் சாகாதீங்கடி எனவும் கூறி அதகளப்படுத்துகிறார்.

  இதுதான் கதையா?

  இதுதான் கதையா?

  மேலும், சந்தானம் சொல்லும் அந்த வசனத்தை வைத்தும், 2027ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டுக்கு தனது திருமணத்தை நிறுத்தவும் சந்தானம் வருவதில் இருந்தே, திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் கணவன்மார்கள் கஷ்டப்படும் அத்தனை பரிதாபங்களும் தான் படத்தின் கதையாக இருக்கும் என்பது புரிகிறது.

  English summary
  Santhanam’s time machin comedy drama Dikkiloona trailer released now. Santa fans go craze for his comedy counter punches in this 60 minutes fantastic trailer.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X