எங்க அப்பா காலும் அப்படித்தான் இருக்கும்.. கதை கேட்டதுமே கதறி அழுதுட்டேன்.. டான் அம்மா நெகிழ்ச்சி!

சென்னை: சிவகார்த்திகேயனின் டான் படத்தில் அம்மாவாக நடித்த நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி டான் படத்தின் அந்த முக்கியமான காட்சி குறித்து உணர்ச்சிகரமாக பேசியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியான 4 நாட்களிலேயே உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

30 முதல் 35 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட டான் திரைப்படம் 100 கோடியை இரண்டாவது வார இறுதியில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 கோடியை எட்டுமா

100 கோடியை எட்டுமா

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனை 100 கோடி வசூல் நாயகனாக மாற்றியது. இந்நிலையில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 13ம் தேதி வெளியான டான் திரைப்படம் 4 நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை உலகளவில் எட்டி உள்ளது. கமலின் விக்ரம் படம் வரும் வரை டான் படத்தின் ஓட்டத்திற்கு தடை ஏற்படாத நிலையில், 100 கோடி வசூலை தாண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்றோர்கள் பாராட்டும் படம்

பெற்றோர்கள் பாராட்டும் படம்

குடும்பங்கள் கொண்டாடும் படம் என சொல்வதை விட டான் திரைப்படம் பெற்றோர்கள் பாராட்டும் படமாக மாறியுள்ளது. அப்பா மகனுக்கு தரமான வில்லனாக தெரியலாம். ஆனால், அவர் தான் மகனை அப்படியொரு சூப்பர் ஹீரோவாக மாற்றுகிறார் என்கிற கதையை சொல்லி டான் படத்தின் மூலம் பல பெற்றோர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.

டான் அம்மா

டான் அம்மா

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தேன், நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மாமியராக நடித்த நான், டான் படத்தில் அம்மாவாக புரமொஷன் ஆகிவிட்டேன் என ஆரம்பத்திலேயே கலகலப்பாக தொடங்கிய ஆதிரா பாண்டிலட்சுமி கடைசியில் ரசிகர்களை நெகிழ வைத்து விட்டார்.

அப்பா இல்லை

அப்பா இல்லை

டான் படத்தின் கதையை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சொல்லும் போதே கண் கலங்கி அழுது விட்டேன். எனக்கும் அப்பா இல்லை, சமுத்திரகனி சாருக்கும் இல்லை. சிவகார்த்திகேயனுக்கும் இல்லை. நாங்கள் மூவருமே அப்பாவை இழந்து தவித்து வாடி வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சியில் நடிப்பது ரொம்பவே கடினமாக இருந்தது என்றும் யாரும் நடிக்கவில்லை. அப்படியே வாழ்ந்தோம் என்றார்.

Recommended Video

Cibi Chakaravarthi Exclusive Interview | Don movie |Filmibeat Tamil
எங்க அப்பா காலும்

எங்க அப்பா காலும்

டான் படத்தில் சமுத்திரகனியின் கால்கள் மகனுக்காக உழைத்து எப்படி ஓடாய் தேய்ந்து போயிருக்கிறது என்றவொரு காட்சி தான் பலரையும் அந்த படத்தை பாராட்ட வைத்துள்ளது. எங்கப்பாவின் கால்களும் அப்படிதான் இருக்கும். என்னை ரொம்ப சிறப்பா வளர்ந்தாங்க எங்கப்பா, டான் படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு சீனிலும் என் கண்ணுக்கு எங்கப்பா வந்து சென்றார் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X