சூர்யா 38 படத்தை துவங்கும் முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்ற சூர்யா
Recommended Video

சென்னை: சுதா கொங்கரா படத்தில் நடிப்பதற்கு முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார் சூர்யா.
புதுப்படங்களை துவங்கும் முன்பும், பட ரிலீஸுக்கு முன்பும் பாலிவுட் பிரபலங்கள் அஜ்மீர் தர்காவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த பட்டியலில் சூர்யா சேர்ந்துள்ளார்.
சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளனர்.
சூர்யா
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் முன்பு சூர்யா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார். சுதாவும், சூர்யாவும் தர்காவில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
ஸ்க்ரிப்ட்
அஜ்மீர் தர்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தால் சுதா கொங்கரா கையில் படத்தின் ஸ்க்ரிப்ட் இருப்பது தெரிகிறது. சூர்யா தலையில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு தர்காவில் நிற்கும் புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
படப்பிடிப்பு
சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. இந்நிலையில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் கோரி ட்வீட் செய்துள்ளார் சூர்யா.
அபர்ணா
சூர்யா 38 படத்தின் பூஜை இன்று நடந்தது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சர்வம் தாளமயம் புகழ் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











