தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளில் இல்லையா... எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை : தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

விஜய்யின் பிறந்தநாள் இல்லாமல் மற்றொரு தேதியில் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். என்ன பிரச்சனை...அப்படியானால் விஜய் பிறந்தநாளில் என்ன வெளியிடப்பட போகிறார்கள்...எந்த ட்ரீட்டும் கிடையாது என பலவிதமான கேள்விகள் எழுந்து வருகிறது.

தெலுங்கில் முன்னணி டைரக்டரான வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தளபதி 66 டீம் இதுதான்

தளபதி 66 டீம் இதுதான்

கடந்த ஒரு மாதமாக ஐதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், பிரபு, யோகிபாபு, ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, பிக்பாஸ் சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு ஹீரோயின் இருக்காரா

இன்னொரு ஹீரோயின் இருக்காரா

இதுவரை வெளியான தகவல்களின் படி, சரத்குமார் விஜய்யின் அப்பாவாகவும், ஜெயசுதா அம்மாவாகவும் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் அண்ணன்களாகவும் நடிக்கிறார்கள். தளபதி 66 படத்தில் 66 பாடல்கள் உண்டு. இதில் ஒன்று சென்டிமென்ட் பாடல். பாடல் இசையின் பெரும்பாலான வேலைகள் தமன் ஏற்கனவே மடித்து விட்டார். படத்தில் இன்னொரு ஹீரோயின் வேறு இருக்கிறார். அவர் யார் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும். இதுவரை பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் தான் சீன்கள் எடுக்கப்படும் என கூறப்பட்டது.

பொங்கல் ரிலீசுக்கு தயார்

பொங்கல் ரிலீசுக்கு தயார்

கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாளன்று பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டதை போல், இந்த ஆண்டு விஜய் பிறந்தநாளில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. தளபதி 66 படத்தை 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவே படக்குழு திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் தான் ஃபர்ஸ்ட்லுக்கா

இந்த தேதியில் தான் ஃபர்ஸ்ட்லுக்கா

ஆனால் இன்று படக்குழு, தளபதி 66 படத்திற்காக டிசைன் செய்யப்பட்ட போஸ்டரில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜுன் 21 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விஜய்யின் பிறந்தநாளுக்கு முதல் நாளே தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளது. அப்படியானால் விஜய்யின்பிறந்தநாளில் என்ன அப்டேட் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

 விஜய் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட்லுக் இல்லையா

விஜய் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட்லுக் இல்லையா

ஒருவேளை கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதை போல் இந்த ஆண்டும் ஜுன் 21 ம் தேதியன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டு, ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க போகிறார்களா என கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X