மிரள வைக்கும் தளபதி 66 அப்டேட்... இப்படி ஒரு தகவலை எதிர்பார்க்கவே இல்லையே
சென்னை : விஜய் நடித்து வரும் தளபதி 66 படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. கொஞ்சமும் எதிர்பார்க்காத இந்த முக்கிய அப்டேட்டை ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.
பீஸ்ட் படத்தை முடித்த கையோடு அடுதத்த படமான தளபதி 66 படத்தின் வேலைகளில் இறங்கி விட்டார் விஜய். தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இந்த படத்தை இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் பேனரில் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

விஜய் ரோல் இது தானா
ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் தளபதி 66 படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அப்பாவாக சரத்குமார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமாரின் மூன்றாவது மகன் ரோலில் தான் விஜய் நடிக்கிறாராம். விஜய்க்கு அண்ணனாக நடிக்க அவருக்கு சம வயதிலும், சற்று வயதில் மூத்தவர்களாக இருக்கும் பிரபல ஹீரோக்கள் சிலரிடம் பேசப்பட்டு வருகிறதாம்.

விஜய் ஐதராபாத்தில் இருக்கிறாரா
தளபதி 66 படத்தின் ஷுட்டிங் துவங்கி விட்டதாகவும், முதல் கட்டமாக விஜய் - ராஷ்மிகா நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தளபதி 66 ஷுட்டிங் எங்கு நடக்கிறது என தெரியாமல் இருந்த நிலையில், தற்போது ஐதராபாத்தில் ஷுட்டிங் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி 66 படத்தின் ஷுட்டிங்கிற்காக தான் விஜய் ஐதராபாத் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

என்ன சொல்றீங்க...நிஜமாவா
மற்றொரு லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், தளபதி 66 படத்தின் முதல் கட்ட ஷுட்டிங்கை அதற்குள் முடித்து விட்டார்களாம். வெறும் 10 நாட்களில் முதல் கட்ட ஷுட்டிங்கையே முடித்து விட்டார்களாம். இரண்டாம் கட்ட ஷுட்டிங் வரும் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். இதை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

எதுக்கு இவ்வளவு அவசரம்
ஷுட்டிங் ஆரம்பித்ததே தெரியவில்லை, அதற்குள் முதல் கட்ட ஷுட்டிங்கை முடித்து இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை துவக்க போகிறார்களா. விஜய், ராஷ்மிகா, சரத்குமார் தவிர படத்தில் நடிக்கும் மற்றவர்கள் பற்றி எந்த விபரமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் படுவேகமாக ஷுட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறார்களே. எதற்காக இந்த அவசரம் என புரியாமல் பலர் குழம்பிப் போய் இருந்தாலும், விஜய்யின் தீவிர ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











