விஜய் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள்… லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க
சென்னை: வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தளபதி 67க்குப் பிறகு விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யின் அடுத்தடுத்த படங்களின் இயக்குநர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரபரக்கும் விஜய்
பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு படத்தை முடித்து விட்டு, தளபதி 67-க்காக தயாராகி வருகிறார் விஜய். லோகேஷுடன் மீண்டும் விஜய் இணைவதால், தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாஸ்டர் படத்தை சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் - லோகேஷ் கூட்டணி, தளபதி 67 படத்திலும் பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்துவிட்டதால், படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட லோகேஷ் ப்ளான் செய்துள்ளாராம்.

தளபதி 68 இயக்குநர்
இந்நிலையில், லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்துக்குப் பிறகு, விஜய்காக அட்லீ கதையோடு காத்திருக்கிறாராம். ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லீ, அதை முடித்ததும் விஜய் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் 68வது படமாக இது உருவாகும் எனவும், தகவல் வெளியாகியுள்ளது. விஜய் - அட்லீ காம்போவில் வெளியான தெறி, மெர்சல், பிகில் படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளதால், திரும்பவும் இணையவுள்ளனர். இதனையடுத்து விஜய் நடிக்கும் படத்திற்கும் இயக்குநர் ரெடியாகிவிட்டாராம்.

விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி
அட்லீயின் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளாராம். தடையறத் தாக்க, மீகாமன், தடம் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி, இப்போது உதயநிதி நடிப்பில் கலகத் தலைவன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை மறுநாள் வெளியாகிறது. ஆக்சன் ஜானரில் படங்கள் எடுப்பதில் கில்லாடியான மகிழ் திருமேனி, விஜய்க்கு சூப்பரான கதையோடு காத்திருக்கிறாராம். அதனால், விஜய்யின் தளபதி 69 படத்தை மகிழ் திருமேனி இயக்கலாம் என சொல்லப்படுகிறது.

செம்ம ஜாக்பாட்
அதேபோல், விஜய்யின் தளபதி 70 படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி, லவ் டுடே என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள பிரதீப் ரங்கநாதன், ஏற்கனவே விஜய்க்கு கதை சொல்லிவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும், விஜய் ஓக்கே சொன்னதும் இந்தப் படம் தொடங்கப்படும், உடனடியாக இல்லாவிட்டாலும் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தை இயக்குவேன் என சமீபத்தில் கூறியிருந்தார். இதனால், தளபதி 70 படத்தை பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்வார் எனக் கூறப்படுகிறது.

ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா?
இந்த வரிசையில் விஜய்யின் தளபதி 71 படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய்க்காக கதை தயார் செய்துள்ளார் வெற்றிமாறன். எப்போதோ இந்தக் கூட்டணி இணைந்திருக்க வேண்டும். ஆனால், சில காரனங்களால் அது முடியாமல் போனது. இந்நிலையில், விரைவில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆர்ஜே பாலாஜியும் விஜய்க்காக கதை ரெடியாக இருப்பதாக கூறியிருந்தார். விஜய்யின் 72வது படமாக இது இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 தவிர்த்து விஜய்யின் அடுத்த 5 படங்களுக்கான இயக்குநர்கள் வெயிட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











