Don't Miss!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- News
காற்றழுத்த தாழ்வு மண்டலம்..தமிழ்நாட்டில் 29 முதல் இடி மின்னலுடன் மழை..சூறாவளியும் வீசுமாம்
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
விஜய் – தோனி கூட்டணியில் டோலிவுட் சூப்பர் ஸ்டார்...? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாஸ் அப்டேட்
சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், விஜய்யும் தோனியும் கூட்டணி வைக்கவுள்ள படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்தோட சூட்டிங் ஒருபுறம்.. டப்பிங் மறுபுறம்.. மாஸ் காட்டும் விஜய்!

பரபரக்கும் விஜய்
விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் புதிய கூட்டணி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தல தோனியுடன் கூட்டணி
விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியும் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வைரலாகின. அப்போதே இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் – தோனி கூட்டணியில் மகேஷ் பாபு
'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் தொடங்கியுள்ள நிறுவனம் மூலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களை தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக 2011ல் இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை பின்னணியாகக் கொண்டு 'Blaze of Glory' என்ற படத்தையும், 'The Hidden Hindy' என்ற பெயரில் புராண கதையுடன் கூடிய படத்தை தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை தோனி தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மகேஷ் பாபுவின் புதிய லுக்
ஏற்கனவே விஜய், மகேஷ் பாபு இருவரும் 'துப்பாக்கி' படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஏஆர் முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், தோனி தயாரிப்பில் விஜய்யும் மகேஷ் பாபுவும் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற தகவல், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல், மகேஷ் பாபுவும் ராஜமெளலி இயக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இருவரும் இந்தப் படங்களை முடிக்கும் முன்னர், தோனி தயாரிப்பில் உருவாகும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மகேஷ் பாபுவின் புதிய லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.