“ஊ சொல்றியா மாமா“ பாடலுக்கு புது விளக்கம் கொடுத்த இளைஞர்… இதுவும் நல்லாத்தான் இருக்கு!
சென்னை : இளசுகளை சுற்றி சுற்றி ஆட்டம் போடவைத்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஒரு இளைஞர் சுவாரசியமான விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
இணையத்தில் வெளியாகி உள்ள அந்த வீடியோ பல லைக்குகளை பெற்று தீயாக பரவி வருகிறது.
இந்த ஆண்டின் ஹிட் பாடலாக மாறியுள்ள இந்த பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தாறுமாறாக ஆட்டம் போட்டு வருகின்றனர்.

புஷ்பா
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளிவந்தது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

ஹிட்டடித்த பாடல்
படத்தைவிட படத்தில் இடம்பெற்றிருந்த ஸ்ரீ வள்ளி பாடலும், சாமி பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் சாமி பாடலைவிட, சமந்தா வேற லெவலில் கவர்ச்சி காட்டி நடனம் ஆடிய ஊ சொல்றியா மாமா... ஊ ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பெரும் வெற்றி பெற்றது. ஆண்ட்ரியாவின் ஹஸ்கி வாய்ஸும், சமந்தாவின் கிக்கேற்றும் நடனமும் பாடலை உலக அளவில் கொண்டு சென்றது.

கொந்தளித்த ஆண்கள்
இந்த பாடலில் கலரோ கருப்போ மாநிறமோ... நெறத்துல ஒன்னும் இல்லைங்க... சீனி சக்கரை கட்டிய சுத்தி... எறும்பா திரியும் ஆம்பள புத்தி... என்ற பாடல் வரியைக் கேட்டு ஆதங்கப்பட்டு ஆண்கள், இந்த பாடலின் வரி ஆண்களை அவமதிப்பதாக உள்ளது என்று கொந்தளித்தனர். ஆனால், படம் வெளியே வந்ததும் திரையரங்கில் ஆட்டம் போட்டது என்னமோ ஆண்கள் தான். யூடியூபில் இது டிரெண்டிங்கில் உள்ளது.

புது விளக்கம்
இந்நிலையில், ஊ சொல்றியா மாமா... ஊ ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இளைஞர் ஒருவர் புதுவிளக்கம் அளித்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், O-னா Ether, OH-னா Alcohal, CHO-னா Aldehyde இப்படி கேட்குற பாட்டுல கூட கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட்டாகும் என கூறி, ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சுவாரசியமான விளக்கத்தை கொடுத்துள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் அட இதுவும் நல்லாத்தான் இருக்கு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











