பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை இழந்த 5 டாப் நடிகர்கள் இவங்க தான்
சென்னை : தமிழில் பிரம்மாண்ட வரலாற்று படமாக பொன்னியின் செல்வன் படத்தை உருக்கி உள்ளார் டைரக்டர் மணிரத்னம். இதில் இந்திய சினிமாவை சேர்ந்த ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் இந்த படத்தில் முக்கிய ரோல்களில் நடிக்க வேண்டிய வாய்ப்பை பிரபலமான 5 நடிகர்கள் கை நழுவ விட்டுள்ளனர்.
மணிரத்னத்தின் கனவு படமாக பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என நடிகர், நடிகைகள் ஏங்குவது வழக்கம். அதிலும் பொன்னியின் செல்வன் மிகப் பெரிய வரலாற்று காவியம். இந்த படத்தில் நடிப்பதும், இயக்குவதும் திரையுலகை சேர்ந்த பலரின் வாழ்நாள் லட்சியம் என்றே சொல்லலாம்.
அப்படிப்பட்ட படத்தை மணிரத்னம் தற்போது உருவாக்கி வெற்றி கண்டுள்ளார் மணிரத்னம். இதில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர், நடிகையருக்கும் அவர்கள் ரோலில் மிகக் கச்சிதமாக நடிக்க தனியாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு பல காரணங்களால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை இழந்தவர்கள் பற்றிய இங்கே பார்க்கலாம்.

விஜய்
பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி நடித்துள்ள லீட் ரோலில் நடிப்பதற்கு தனது ஃபஸ்ட் சாய்ஸ் விஜய் மற்றும் மகேஷ் பாபு தான் என டைரக்டர் மணிரத்னமே பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கான திரைக்கதையை உருவாக்கி முடித்து விட்டு, விஜய்யிடம் பேசப் போகும் போது அவர் மற்ற படங்களில் பிஸியாக இருந்துள்ளார். இந்த வரலாற்று படத்தை எடுத்து முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்பதால், அதுவரை மற்ற படங்களை காக்க வைக்க முடியாது என்பதால் தான் விஜய் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

கீர்த்தி சுரேஷ்
பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்க கீர்த்தி சுரேஷை தான் முடிவு செய்து வைத்துள்ளனர். ஆனால் அதற்குள் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த்திற்கு தங்கை ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது கீர்த்தி சுரேஷிற்கு. ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாத காரணத்தால் பொன்னியின் செல்வன் வாய்ப்பை இழந்து விட்டாராம் கீர்த்தி சுரேஷ். இதே போல் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக நானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் கீர்த்தி வேண்டாம் என மறுத்து விட்டாராம்.

பார்த்திபன்
மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இரண்டாவது முறையாக இழந்துள்ளார் பார்த்திபன். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பார்த்திபன், தற்போதும் மற்ற படங்களில் நடிப்பதால், தேதி ஒத்து வராத காரணத்தால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பார்த்திபன் நடித்த ரோல் மணிரத்னத்தை மிகவும் கவர்ந்ததால் பொன்னியின் செல்வனிலும் அவரை நடிக்க வைக்க நினைத்தாராம். கடைசி நேரத்தில் அது முடியாமல் போனதால் வேறு ஒருவரை அந்த கேரக்டரில் நடிக்க வைத்துள்ளனர்.

சத்யராஜ்
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் கட்டப்பா என்னும் மிக முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார் சத்யராஜ். அந்த படத்தின் வெற்றிக்கு சத்யராஜும் ஒரு ப்ளஸ் என்றே சொல்லலாம். இதனால் சத்யராஜை மிக முக்கிய ரோலில் நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்து வைத்துள்ளார். ஆனால் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததாக பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க சத்யராஜ் மறுத்து விட்டாராம். சத்யராஜ் நடிக்க வேண்டிய ரோலில் தான் நடிகர் பிரபு நடித்துள்ளாராம்.

அனுஷ்கா ஷெட்டி
அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி உள்ளிட்ட பல வரலாற்று படங்கள், பேய் படங்களில் நடித்து, அதற்காக பாராட்டுக்களை பெற்றவர் அனுஷ்கா ஷெட்டி. அதனால் பொன்னியின் செல்வனில் லீட் ரோலில் நடிக்க அனுஷ்காவிடம் கேட்கப்பட்டதாம். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை அனுஷ்கா மறுத்து விட்டாராம். அனுஷ்கா நடிக்க வேண்டிய ரோலில் தான் த்ரிஷா நடித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











