த்ரிஷாவும் இல்ல; சமந்தாவும் இல்ல...தளபதி 67 ஹீரோயின் இவர் தானா?

சென்னை : டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தளபதி 67 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. தளபதி 67 பட அறிவிப்பு எப்போது வரும் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தளபதி 67 ஷுட்டிங் எப்போ

தளபதி 67 ஷுட்டிங் எப்போ

அக்டோபர் மாதத்தில் தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், கதையை உறுதி செய்யும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பல நாட்களாக தகவல் பரவி வருகிறது. அதோடு இந்த படத்தில் மும்பை தாதாவாக விஜய் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.இதற்கிடையில் புதிய தகவலாக டிசம்பர் மாதத்தில் தளபதி 67 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் தான் ஹீராயினாக?

இவர் தான் ஹீராயினாக?

இந்த படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிப்பதாகவும், பிறகு த்ரிஷா நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக கீர்த்தி சுரேஷ் பெயரும் அடிபடுகிறது. தளபதி 67 ல் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் தான் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அட..இது கூட நல்லா தான் இருக்கு

அட..இது கூட நல்லா தான் இருக்கு

லேட்டஸ்ட் தகவல்களின் படி, 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் த்ரிஷா, விஜய்யின் மனைவி ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் விஜய்யின் காதலியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும், வில்லி ரோலில் தான் சமந்தா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் இணைவது உறுதியானால், பைரவா, சர்கார் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

வாரிசிற்கே இவர் தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்

வாரிசிற்கே இவர் தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்

தளபதி 66 என பெயரிடப்பட்டிருந்த வாரிசு படத்திலேயே முதலில் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் ராஷ்மிகா மந்தனா மாற்றப்பட்டார். இதனால் தளபதி 67 படத்தில் கீர்த்தி சுரேஷ் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X