குந்தவை ரோலுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ் இவரா...அது மட்டும் நடந்திருந்தா எப்படி இருந்திருக்கும்?
சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இது வெளியானது முதல் சோஷியல் மீடியா முழுவதும் பொன்னியின் செல்வன் பற்றிய பேச்சாக தான் உள்ளது.
Recommended Video
கடந்த ஒரு வாரமாக பொன்னியின் செல்வன் டீம், படத்தின் கேரக்டர்கள் பற்றிய போஸ்டரை வெளியிட்டு வருகிறது. இதுவரை விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றை பார்த்து விட்டு, இந்த கேரக்டருக்கு இவர் பொருத்தமாக இருப்பாரா மாட்டாரா, இந்த ரோல் வேறு யார் நடித்திருநதால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சந்தேகத்தை கிளப்பிய ரசிகர்கள்
இதில் ஆதித்த கரிகாலன் ரோலில் விக்ரம், வந்தியத் தேவன் ரோலில் கார்த்தி, அருள்மொழி வர்மன் ரோலில் ஜெயம் ரவி ஆகியோரை திரையில் பார்க்க ஆர்வமாக காத்திருப்பதாக ரசிகர்கள் கூறினர். அதே சமயம் ஐஸ்வர்யா ராய் வில்லியான நந்தினி ரோலுக்கு பொருத்தமாக இருப்பாரா என சந்தேகத்தை கிளப்பினார்கள்.

குந்தவை ரோலில் த்ரிஷாவா
ஆனால் குந்தவை ரோலில் த்ரிஷாவை பார்த்து விட்டு பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். நாவலில் குந்தவை கேரக்டரை படிக்கும் போது அனுஷ்கா தான் கண் முன் வந்தார். ஆனால் அந்த ரோலில் த்ரிஷா என்பது பொருத்தமாக இருக்குமா என்பது சந்தேகத்திற்குரிய கேள்வி தான் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சோழ சாம்ராஜ்யத்தின் வீரமங்கை என போற்றப்படுபவர் குந்தவை. அவர் ரோலில் த்ரிஷா, கொஞ்சமும் எடுபடவில்லை என நேரடியாகவே பலர் கூறி வந்தனர்.

செம போட்டியா இருக்கே
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் டீசரில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும் காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அழகில் செம போட்டியா இருக்கே என ரிப்பீட் மோடில் இந்த சீனை பார்த்து வருகின்றனர்.

இவர் தான் ஃபர்ஸ்ட் சாய்சா
ஆனால் த்ரிஷா நடித்திருக்கும் குந்தவை ரோலில் நடிப்பதற்கான ஃபர்ஸ்ட் சாய்சாக இருந்தது கீர்த்தி சுரேஷ் தானாம். ஆனால் அந்த சமயத்தில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், பொன்னியின் செல்வன் வாய்ப்பை வேண்டாம் என மறுத்து விட்டாராம் கீர்த்தி. அதற்கு பிறகு தான் த்ரிஷாவை அந்த ரோலில் புக் செய்துள்ளனர்.

இப்படி மிஸ் பண்ணிட்டாரே
அண்ணாத்த, சாணி காயிதம், குட் லக் சகி என வரிசையாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால், பொன்னியின் செல்வன் வாய்ப்பை அவர் தவற விட்டதை வைத்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அண்ணாத்த படத்திற்காக இப்படி ஒரு அரிய சான்சை மிஸ் செய்து விட்டாரே என பலரும் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











