தளபதி 67 ல் விஜய்க்கு வில்லனாகும் பிரபலம்...அப்போ மிரட்டலுக்கு தாறுமாறு தான்

சென்னை : பீஸ்ட் படத்தை தொடர்ந்து டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

படத்தின் ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் அடிக்கடி கசிந்து வருவது படக்குழுவினரை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.

ஏற்கனவே சென்னையில் நடத்தப்பட்ட ஷுட்டிங் போட்டோக்கள் கசிந்த நிலையில் சமீபத்தில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடத்தப்பட்ட ஷுட்டிங் போட்டோக்கள் கசிந்தன. இதைத் தொடர்ந்து நேற்று மருத்துவமனை சீன் ஒன்றின் போட்டோக்கள் கசிந்துள்ளன.

மருத்துவமனை சீனும் லீக்கானது

மருத்துவமனை சீனும் லீக்கானது

அந்த சீனில், சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெட்டில் படுத்துள்ளார். அவருக்கு அருகில் விஜய் மற்றும் பிரபு நிற்கிறார்கள். இது சென்டிமென்ட் சீனாக எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீனில் பிரபுவின் கெட்அப்பை பார்க்கும் போது அவர் டாக்டர் ரோலில் நடிக்கிறார் என தெரிகிறது.

தளபதி 67 எப்போ

தளபதி 67 எப்போ

இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் விஜய்யின் வாரிசு படத்திற்கு தருவதை விட அவர் அடுத்து நடிக்க போகும் தளபதி 67 படத்திற்கு தான் அவரின் ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.

 தினம் ஒரு அப்டேட் வருதே

தினம் ஒரு அப்டேட் வருதே

தினம் தினம் தளபதி 67 பற்றி ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை வெளியான தகவலின் படி தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. சஞ்சய் தத், ப்ருத்விராஜ், ஆக்ஷன் கிங் அர்ஜூன் ஆகியோர் வில்லன்களாக நடிப்பதாக இதுவரை சொல்லப்பட்டது.தளபதி 67 ல் மன்சூர் அலி கானுக்கு பெரிய கேரக்டர் இருக்கு என லோகேஷ் கனகராஜே பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார்.

தளபதி 67 வில்லன் லிஸ்டில் இவருமா

தளபதி 67 வில்லன் லிஸ்டில் இவருமா

லேட்டஸ்ட் தகவலின் படி, டைரக்டர் கெளதம் வாசுதேவ மேனனும் மற்றொரு வில்லனாக தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு வேளை இது நடந்தால் விஜய்யுடன் கெளதம் மேனன் இணையும் முதல் படம் இதுவாக தான் இருக்கும். அதுவும் வில்லன் ரோலில் நடிக்க போகிறார். ஏற்கனவே வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாக கெளதம் மேனன் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது விஜய்க்கும் வில்லனாக போவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Recommended Video

Iswarya Menon | Cameraman ராஜசேகர் என்னை ரொம்ப அழகா காட்டி இருக்கிறார் | *INTERVIEW
இப்போதாவது இணையுமா இந்த காம்போ

இப்போதாவது இணையுமா இந்த காம்போ

2010 ம் ஆண்டின் ஆரம்பத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட யோகன்: அத்யாயம் ஒன்று என்ற படத்தை கெளதம் மேனன் தான் இயக்க இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படம் முடியாமல் போனது. அதனால் இந்த முறை இந்த காம்போ நிச்சயம் இணையும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X