தளபதி 66 ல் விஜய்யின் இன்னொரு அண்ணன் யார் தெரியுமா...வந்தாச்சு அடுத்த அப்டேட்

சென்னை : தளபதி 66 படத்தில் விஜய்யின் இன்னொரு அண்ணன் ரோலில் யார் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பவர்கள் பற்றி அடுத்தடுத்து அப்டேட் வெளியிடப்பட்டு வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு டைரக்டரான வம்சி பைடபள்ளி, இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

டிரெண்டிங்கான விஜய்யின் லுக்

டிரெண்டிங்கான விஜய்யின் லுக்

தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் முடிவடைந்து, நேற்று முதல் மூன்றாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தில் நடிப்பவர்கள் பற்றி தினம் தினம் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அதிலும் இன்று தளபதி 66 படத்தில் விஜய்யின் லுக் எப்படி உள்ளது என்பது பற்றிய போட்டோ வெளியானதால் ரசிகர்களை உடனே அதை டிரெண்டிங் ஆக்கி கொண்டாட துவங்கி விட்டனர்.

இன்னொரு அண்ணன் யார்

இன்னொரு அண்ணன் யார்

எமோஷனல், குடும்ப படமான தளபதி 66 படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமாரும், அம்மாவாக ஜெயசுதாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. கதைப்படி விஜய்க்கு இரண்டு அண்ணன்கள். இதில் ஒரு அண்ணன் ரோலில் நடிகர் ஷாம் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் மற்றொரு அண்ணன் யார் என்பது பற்றிய அப்டேட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவர் விஜய்யின் அண்ணனா

இவர் விஜய்யின் அண்ணனா

லேட்டஸ்ட் தகவலின் படி, விஜய்யின் இன்னொரு அண்ணன் ரோலில் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ஸ்ரீகாந்த், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இதுவரை 120 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீகாந்த், பெரும்பாலும் வில்லன் ரோல்களிலேயே நடிப்பார்.

தமிழில் முதல் படம்

தமிழில் முதல் படம்

பல விருதுகளை வென்றுள்ள ஸ்ரீகாந்த், கடைசியாக அகண்டா, சன் ஆஃப் இந்தியா, கன்னடத்தில் மறைந்த சூப்பர் ஹீரோ புனித் ராஜ்குமார் நடித்த ஜேம்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தளபதி 66 படத்தில் இவர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இது தான். அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்படுவதால், அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும். இன்னும் யாரெல்லாம் என்னென்ன ரோல்களில் நடிக்கிறார்கள் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X