»   »  நயன்தாராவுக்கு கிடைக்காதது த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது

நயன்தாராவுக்கு கிடைக்காதது த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது

Posted By:
Subscribe to Oneindia Tamil
சோலோ பெண்ணாக களமிறங்கும் த்ரிஷா

சென்னை: நயன்தாராவுக்கு இதுவரை கிடைக்காத ஒரு படம் த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது.

16 ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. தற்போது அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.

இந்நிலையில் த்ரிஷா வித்தியாசமான ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

பாலாவிடம் உதவியாளராக இருந்த வெர்னிக் குற்றப்பயிற்சி என்ற படம் மூலம் இயக்குனர் ஆகிறார். இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

ட்வீட்

குற்றப்பயிற்சி படத்தில் நடிப்பது குறித்து த்ரிஷா ட்வீட்டியுள்ளார். இந்த படத்தில் நடிக்க காத்திருப்பதாகக் கூறி அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

வெர்னிக்

வெர்னிக்

இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளரான ரஜனி பண்டிட்டை இன்ஸ்பயர் செய்தே த்ரிஷாவின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். த்ரிஷா துப்பறிவாளராக நடிக்கிறார் என்கிறார் வெர்னிக்.

1980

1980

குற்றப்பயிற்சி படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. 1980கள் பின்னணியில் படம் நகரும். இந்த படத்தை ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சுரபி, சூப்பர் சுப்பராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். விஷால் துப்பறிவாளராக நடித்துள்ள நிலையில் த்ரிஷாவும் நடிக்கவிருக்கிறார்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாராவுக்கு கூட இதுவரை இது போன்ற துப்பறிவாளர் கதாபாத்திரம் கிடைக்கவில்லை.

Read more about: trisha, actors, த்ரிஷா
English summary
Trisha is set to act in Kutrapayirchi movie as a detective. The movie will be directed by debutant Verniq who was an assistant of director Bala. Trisha's character is inspired from Rajani Pandit who is one of India's first woman detective.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil