»   »  'அம்மா' நினைவிடத்தில் த்ரிஷா மலர் தூவி அஞ்சலி

'அம்மா' நினைவிடத்தில் த்ரிஷா மலர் தூவி அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை த்ரிஷா இன்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றால் நடிகை த்ரிஷாவுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த நபர் ஜெயலலிதா, நானும் அவரை போன்றே சர்ச் பார்க் பள்ளியில் படித்தேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது என்று அவ்வப்போது கூறி வருபவர் த்ரிஷா.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தால் த்ரிஷா சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

 நினைவிடம்

நினைவிடம்

ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை த்ரிஷா தனது தாய் உமாவுடன் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 இழப்பு

இழப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு திரையுலகம் மற்றும் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று த்ரிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 ராஜாஜி ஹால்

ராஜாஜி ஹால்

ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ராஜாஜி ஹால் வரை வந்த த்ரிஷா கூட்ட நெரிசலால் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திரும்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவை போன்றே சர்ச் பார்க் பள்ளியில் படித்த நடிகை ஸ்ரீப்ரியாவும் ஜெயலலிதாவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார். சர்ச் பார்க் பள்ளி மாணவிகள் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

English summary
Actress Trisha paid respects to former CM Jayalalithaa at her memorial in Marina beach on sunday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil