»   »  நாயகியால் பேயாட்டம் கண்ட மோகினி

நாயகியால் பேயாட்டம் கண்ட மோகினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா நடிப்பில் வெளியான நாயகி படம் ஊத்திக் கொண்டதால் மோகினி படம் கைவிடப்பட்டுள்ளதாம்.

நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் அடுத்ததாக த்ரிஷா நாயகி என்ற படம் மூலம் சோலோ நாயகியாகவும், பாடகியாகவும் தன்னை மெருகேற்றினார். அதன் விளைவாக அவருக்கு மோகினி என்ற படமும் கிடைத்து படப்பிடிப்பும் லண்டனில் தொடங்கி சில நாட்கள் முன் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம்வந்தது.

Trisha's Mohini movie dropped

ஜூலை 15-ம் தேதி ஆந்திராவில் நாயகி திரைப்படம் வெளியான வேகத்தில், ஸ்பீட் பிரேக் போட்டு தத்தி தவழ்ந்தது. ஆந்திராவில் நாயகி அவுட் ஆனது த்ரிஷா மற்றும் நாயகி படக்குழுவிற்கு மட்டும் அதிர்ச்சி இல்லை. மோகினி திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த மாதேஷுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தான் மோகினி திரைப்படத்தினை தயாரிக்கிறார். அவர் இயக்குனர் மாதேஷுடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக மோகினி திரைப்படத்தை எடுத்துவிடலாம் என்று இப்படத்தில் களம் இறங்கியுள்ளனர். ஆனால், நாயகியின் பல்டி தயாரிப்பாளரை பல்டி அடிக்க வைத்துவிட்டது.

இதனால், இருபது நாட்கள் மட்டுமே நடந்த மோகினி திரைப்படத்தை நிறுத்த சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர். இதையடுத்து இயக்குனர் மாதேஷும் தற்போது படப்பிடிப்பை நிறுத்தி கிடப்பில் போட்டுவிட்டாராம். இதனால் கடுப்பான த்ரிஷா கூல் ஆக வெளிநாட்டிற்கு சென்றுள்ளாராம்.

English summary
Trisha's upcoming movie Mohini was dropped after Nayaki failed to prove in the box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil