Just In
- 7 min ago
கொரோனா கால அறிவிப்பு.. சத்யராஜ் - கே.எஸ்.ரவிகுமார் படம் டிராப்.. திருப்பூர் சுப்ரமணியம் தகவல்!
- 25 min ago
ராக்ஸ்டார் வெளியிடும் ராக்கி டீசரின் மூன்றாம் பாகம்! ரசிகர்கள் மரண வெய்ட்டிங்
- 49 min ago
ஓடிடி இல்லை, தியேட்டர்தானாம்.. அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது விஷாலின் சக்ரா.. படக்குழு தகவல்!
- 12 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
Don't Miss!
- Sports
என்னது சிஎஸ்கேவில் இவரா? ஐயோ வேண்டவே வேண்டாம்.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த சம்பவம்.. பரபரப்பு
- Automobiles
விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு
- News
சீரம் நிறுவன தீவிபத்தால் ரூ 1000 கோடி நஷ்டம்.. கோவிஷீல்டு மருந்துகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுக்குத்தான் அவ்ளோ பேச்சா.. மீண்டும் தள்ளிப் போன திரிஷா படம்.. அடுத்த மாசமாவது?
சென்னை: நடிகை திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் மார்ச் மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.
நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த, பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் இறுதி நேரத்தில், தியேட்டர்கள் கிடைக்காததால், தள்ளிப் போயுள்ளது.
திருஞானம் இயக்கத்தில், திரிஷா, நந்தா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இது ஏடாகூடமாச்சே.. ராம் கோபால் வர்மாவை கல்யாணம் பண்ணிக்க ஆசையாம்.. பரபரப்பை கிளப்பிய நடிகை!

தொடரும் பிரச்சனை
திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள பரமபதம் விளையாட்டு, கடந்த ஜனவரி 31ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. இந்நிலையில், தற்போது மீண்டும் தள்ளிப் போயுள்ளது.
|
ரிலீஸ் இல்லை
ஏற்கனவே படம் தள்ளிப் போன நிலையில், இந்த முறை எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என திட்டமிட்ட தயாரிப்பு தரப்பு, பரமபதம் விளையாட்டு திரைப்படத்தை நாளை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது, இந்த படம் நாளை வெளியாகாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திரிஷா மீது கோபம்
இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்குத் தான் நடிகை திரிஷா பங்கேற்கவில்லை என்று, அவர் மீது, தயாரிப்பு தரப்பு கோபத்தை கொப்பளித்தது. லோ பட்ஜெட் படம் என்றாலும், எதிர்பார்த்தபடி படம் உருவாகாததால் படத்தை புரொமோட் செய்யும் ஐடியாவை திரிஷா கை விட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

என்ன காரணம்?
இப்படி கடைசி நேரத்தில் திரிஷாவின் பரமபதம் விளையாட்டு ரிலீஸ் தேதி தள்ளிப் போக, என்ன காரணம்? என்று விசாரித்தால், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், உன் காதல் இருந்தால் மற்றும் திரெளபதி என மூன்று படங்கள் நாளை ரிலீஸ் ஆவதால், பரமபதம் விளையாட்டு படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தியேட்டர்கள் குறைவு
திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்திற்கு, குறைவான எண்ணிக்கையிலேயே தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், இயக்குநரும் தயாரிப்பாளருமான திருஞானம் படத்தின் ரிலீஸ் தேதியை, அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போட்டுள்ளாதாக ஜான்சன் பி.ஆர்.ஓ ட்வீட் போட்டுள்ளார்.

கண்டுக்கமாட்டார்
நடிகை திரிஷா கைவசம், தற்போது, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ராங்கி, மோகன் லால் படமான ராம் என ஏகப்பட்ட படங்கள் இருப்பதால், பரமபதம் விளையாட்டு ரிலீஸ் பிரச்சனை குறித்து, திரிஷா கண்டு கொள்ளவோ, கவலைப்படவோ மாட்டார் என சமூக வலைதளத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.