»   »  சுசீந்திரன் படத்தில் நடிக்கணும்: அஜீத், விஜய், சூர்யாவுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து

சுசீந்திரன் படத்தில் நடிக்கணும்: அஜீத், விஜய், சூர்யாவுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்கள் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள் வைத்துள்ளார். பாயும்புலி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து இப்படி பகிரங்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி' படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், காஜல் அகர்வால், வைரமுத்து, டி.இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

வைரமுத்துதான் ராஜா

வைரமுத்துதான் ராஜா

‘பாயும் புலி' படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. இந்த பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறினார் இசையமைப்பாளர் டி.இமான். புலியாக இருந்தாலும் பாயும் புலியாக இருந்தாலும் அந்த காட்டுக்கு வைரமுத்துதான் ராஜா என்று பேசினார்.

அருமையான படம்

அருமையான படம்

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது என்ற வைரமுத்து, இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் எனக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார் என்றார்.

உயரமான விஷால்

உயரமான விஷால்

பாயும்புலி படத்தை பற்றி பேச எனக்கு நிறைய விஷயங்கள் உள்ளது

விஷால் இப்போதே மிகவும் உயரம். இந்த படம் வெளிவந்த பிறகு அவர் மேலும் உயரத்துக்கு சென்றுவிடுவார். சுசீந்திரன் இதுவரைக்கும் வெற்றிப் படங்களைத்தான் கொடுத்துள்ளார். அவருடைய படங்களுக்கு மினிமம் கியாரண்டி கொடுக்கலாம்.

அஜீத், விஜய், சூர்யா

அஜீத், விஜய், சூர்யா

சுசீந்திரன் மிகவும் திறமை வாய்ந்த இயக்குனர். அவரை அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதை அவர்களுக்கு நான் பகிரங்கமான வேண்டுகோளாக விடுக்கிறேன் என்று கூறி முடித்தார் வைரமுத்து. அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்களா ஹீரோக்கள்?.

English summary
Vairamuthu has urged actors Ajith, Vijay and Surya to act in Suseendran's movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil