நேத்து ராத்திரி பார்ட்டி.. ரோபோ சங்கருடன் வனிதா விஜயகுமார் என்னவொரு ஆட்டம்.. வேறலெவல் தான் போங்க!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் ரோபோ சங்கருடன் பார்ட்டியில் நடனமாடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கி வரும் வனிதா விஜயகுமார், பிசினஸிலும் பிசியாக உள்ளார்.

தனது துணிக்கடையில் நண்பர்களுடன் இரவு பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

வேறலெவல் பிசி

வேறலெவல் பிசி

சினிமா, சீரியல், பிசினஸ், யூடியூப் சேனல், சமையல் என நடிகை வனிதா விஜயகுமார் வேறலெவல் பிசியில் உள்ளார். தனது மகளுக்கும் சமையல் கற்றுக் கொடுத்து வித வித டிஷ்களை செய்து யூடியூபில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், தனது நண்பர்கள் மற்றும் நடிகர்களுடன் வனிதா விஜயகுமார் பார்ட்டி பண்ண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நைட் பார்ட்டியில் வனிதா

நைட் பார்ட்டியில் வனிதா

தொடர் விடுமுறை காரணமாக தனது நண்பர்கள் மற்றும் நடிகர்களுடன் நடிகை வனிதா விஜயகுமார் ஜாலியான நைட் பார்ட்டி கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.

ரோபோ சங்கருடன் ஆட்டம்

ரோபோ சங்கருடன் ஆட்டம்

காமெடி நடிகர் ரோபோ சங்கரும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கலக்கி வரும் நிலையில், அவருடன் இணைந்து வனிதா விஜயகுமார் குத்தாட்டம் போட்டுள்ளார். இருவரும் இணைந்து டான்ஸ் ஆடும் போட்டோக்களையும் வனிதா விஜயகுமார் தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார்.

பிரஜனுடன் வனிதா

பிரஜனுடன் வனிதா

சின்னத்திரை நடிகர் பிரஜன் உள்ளிட்டோரும் வனிதா விஜயகுமார் வைத்த நைட் பார்ட்டியில் கலந்து கொண்டனர். பிரஜன் உடன் வனிதா விஜயகுமார் எடுதுக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார். மேலும், சில நண்பர்களும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

Recommended Video

Vanitha Vijaykumar | சொந்தம் விட்டுபோகுமா என்ன? *Kollywood | Filmibeat Tamil
சந்தோஷத்தில் வனிதா

சந்தோஷத்தில் வனிதா

தனது நண்பர்களுடன் கெட்டுகெதர் பார்ட்டி நடத்திய நடிகை வனிதா விஜயகுமார் சந்தோஷத்தில் சிரிக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. நடிகர் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி உள்ள அந்தகன் படத்தில் சிறப்பான ரோலில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். கூடிய விரைவிலேயே அந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X