வாரிசு லீக்கான பாடல்..அட்டிமெட்தான் படம் மிகப்பெரிய சம்பவம் பண்ணும் போல!

சென்னை : வாரிசு படத்திற்காக விஜய் பாடிய பாடல் வீடியோவுடன் லீக்காகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தில் ராஜு பிரமாண்டமாகத் தயாரிக்கும் வாரிசு படத்தில் வம்ஷி பைடிபள்ளி இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

வாரிசு

வாரிசு

வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் நேரடியாக தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளது. விஜய்வுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, முக்கியமான கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமன் இசை

தமன் இசை

வாரிசு படத்தில் சரத்குமாரின் மூன்றாவது மகனாக விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது உறுதியாகிவிட்டதால் வாரிசு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் தமன் கூட்டணி வைத்துள்ளனர்.

விஜய்யின் குரல்

விஜய்யின் குரல்

இந்நிலையில் வாரிசு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில், விஜய்யும், ராஷ்மிகாவும் ஜோடியாக ஆடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. மேலும் ரஞ்சிதமே... ரஞ்சிதமே என தொடங்கும் அந்த பாடல் விஜய்யின் குரலில் இருப்பதால் வாரிசு படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார். இப்பாடலைத் தான் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் திருட்டுத்தனமாக அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த லீக்கான பாடலை பார்த்த ரசிகர் பாடலைப்பார்த்தா படம் மிகப்பெரிய சம்பவம் பண்ணும் போல என பதிவிட்டுள்ளார்.

பிரின்ஸ்

பிரின்ஸ்

தமன் இசையில் சிவகார்த்திகேயேன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் பாடல்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல், தெலுங்கிலும் தமன் இசையில் வெளியான சிரஞ்சீவியின் காட்ஃபாடதர் திரைப்படம், 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. விஜய்யின் வாரிசு ஃபார்ஸ் சிங்கிள் பற்றிய அப்டேட், சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X