Varisu: ப்பா வேறலெவல் மிரட்டல்.. வாரிசு செகண்ட் லுக் செம சீனா இருக்கே.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குவது என பல நல்ல காரியங்களில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended Video

Varisu Second Look - கொண்டாத்தில் ரசிகர்கள் |Thalapathi Vijay *Kollywood | Filmibeat tamil

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது அறிவித்தபடியே வாரிசு படத்தின் செகண்ட் லுக் வெளியாகி விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

ரசிகர்களை கடந்து ஏகப்பட்ட சினிமா பிரபலங்களே நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் விஜய்க்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் உடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து, ஹேப்பி பர்த்டே நண்பா என பதிவிட்டுள்ளார்.

பீஸ்ட் உடன் பிரின்ஸ்

பீஸ்ட் உடன் பிரின்ஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது முதன் முதலாக ஷேர் செய்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட நடிகைகள், நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் விஜய்யின் பிறந்தநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

கோட் சூட் அணிந்து கொண்டு ஏதோ வெளிநாட்டில் சிஇஓவாக இருக்கும் விஜய் இந்தியாவுக்கு திரும்பி வருவது போலத்தான் கதை இருக்கும் என்பது முதல் லுக்கை பார்த்தாலே தெரிகிறது. தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என அதற்கு பை லைனும் கொடுத்து படத்தின் கதை அதுதான் என கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டனர். இந்நிலையில், தற்போது அட்டகாசமான இரண்டாவது லுக்கும் வெளியாகி உள்ளது.

குழந்தைகளுடன் விஜய்

குழந்தைகளுடன் விஜய்

ஃபர்ஸ்ட் லுக்கில் கோட் சூட் அணிந்து கொண்டு சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பது போல தனியாக ஒரு பிரம்மாண்ட அறையில் உட்கார்ந்திருந்த விஜய், தற்போது காய்கறி ஏற்றி வரும் லாரியில் குட்டிக் குழந்தைகளுடன் செம கூலான மோடில் ஊருக்கு திரும்பி வருவது போன்ற போஸ்டர் வெளியாகி உள்ளது.

சந்திரமுகி எஃபெக்ட்

சந்திரமுகி எஃபெக்ட்

சந்திரமுகி படத்தில் மாட்டு வண்டியில் படுத்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வருவதைத் தான் இந்த செகண்ட் லுக் ஞாபகப்படுத்துவதாக ரஜினி ரசிகர்கள் இப்பவே அடுத்த ட்ரோலை செய்ய ஆரம்பித்து விட்டனர். குடும்பங்களை தியேட்டருக்கு கொண்டு வரும் முயற்சியை நிச்சயம் விஜய்யின் வாரிசு செய்யும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X