Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு மெகா தெலுங்கு சீரியல் விரைவில்.. அடடா.. ஆரம்பிச்சுட்டாங்களே அஜித் ரசிகர்கள்!
சென்னை: ஆட்ட நாயகன், பவர் சீட்ல இருக்காது சார், அன்போ அடியோ யோசிச்சு கொடுக்கணும் என வாரிசு ட்ரெய்லர் முழுக்கவே பஞ்ச் வசனங்களால் நிறைந்திருந்தாலும் குடும்ப போர்ஷன் அப்படியே மெகா சீரியல் மாதிரியே இழுவையாக உள்ளது என அஜித் ரசிகர்கள் வாரிசு ட்ரெய்லரை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு ட்ரெய்லர் அறிவித்தபடியே ஷார்ப்பா 5 மணிக்கு சன் டிவி யூடியூபில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
குடும்ப ரசிகர்களை மனதில் கொண்டு காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என டெம்பிளேட் படமாக உருவாகி உள்ள வாரிசு படத்தை மெகா சீரியல் என்றும் பழைய படம் என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்... கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே?

விஜய் மட்டும் தான்
பொன்னியின் செல்வனை போலவே இந்த படத்திலும் சரத்குமார் முகத்தில் எந்தவொரு ரியாக்ஷனும் இல்லாமல் ஒரே மாதிரி ட்ரெய்லர் முழுக்க வருகிறார் என்றும் நடிகர் விஜய்யை தவிர ட்ரெய்லரில் எந்தவொரு கதாபாத்திரமும் மனதில் பதியவில்லை என்றும் பழைய குடும்ப டெம்பிளேட் கதையாக உள்ளது என மனோபாலா விஜயன் வாரிசு ட்ரெய்லரை விமர்சித்துள்ளார்.

ஜில்லா சந்தோஷ் சுப்ரமணியம்
தல இவன் ஜில்லா, சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை ரீமேக் பண்ணி எடுத்து வச்சிருக்கான். செம தெலுங்கு பட ஸ்டண்ட் கியாரண்டி என்று அஜித் ரசிகர்கள் வாரிசு படத்தை துவைத்து தொங்க போட்டு வருகின்றனர். கர்மா இஸ் பூமரங் என சும்மாவா சொன்னார்கள்.

அலா வைகுந்தபுரமுலோ காப்பி
அல்லு அர்ஜுன் நடித்து தெலுங்கில் வெளியான அலா வைகுந்தபுரமுலோ படத்தை லேசா பட்டி டிக்கரிங் பண்ணி எடுத்து வச்சிருக்காங்கப்பா, அந்த ஹெலிகாப்டர்லாம் பார்த்தா அதுதான் நியாபகம் வருது. அந்த படத்தில் ஆவது ஜெயராம், தபு நல்லா நடிச்சிருந்தாங்க, ஆனால், இங்கே ரொம்ப கஷ்டம்ப்பா என கமெண்ட்டுகள் குவிகின்றன.

மெகா தெலுங்கு சீரியல்
குடும்பங்கிறது கோயில் மாதிரி, என் கண்முன்னே குடும்பம் உடைஞ்சிடுச்சு, உங்க மூணாவது பையன் எங்கே, கோச்சிட்டு போகும் அண்ணன்கள் என்னடா மெகா தெலுங்கு சீரியலை எடுத்து வச்சிருக்கீங்க என அஜித் ரசிகர்கள் வித விதமாக ட்ரோல் மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

துணிவு பொங்கல்
வாரிசு படத்தின் ட்ரெய்லர் பார்த்த பிறகு அது ஒரு மெகா சீரியல் என்பது தெளிவாக தெரிகிறது. ஆக்ஷன் அதிரடி நிறைந்த அஜித்தின் பேங்க் ஹெயிஸ்ட் படமான துணிவு தான் இந்த பொங்கல் வின்னர் என அஜித் ரசிகர்கள் துணிவு ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.