Don't Miss!
- News
லோக்சபா தேர்தல்: ஆளுநர்களின் சர்ச்சை நடவடிக்கைகளுக்கு டெல்லி கடிவாளம்- மகா. ஆளுநர் ராஜினாமா ஏன்?
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Lifestyle
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
வாரிசு ட்ரெய்லர் 32 மில்லியன் வியூஸ்.. நாங்க தான் நம்பர் ஒன்.. இது உலகமகா உருட்டா இருக்கே!
சென்னை: வாரிசு படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 32மில்லியன் வியூஸ் கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு துவண்டு கிடந்த விஜய் ரசிகர்களை மீண்டும் சோஷியல் மீடியா சண்டையை போட உற்சாகப்படுத்தி உள்ளது.
நடிகர் அஜித்தின் துணிவு ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் ரியல் டைம் வியூஸ் பெற்று சாதனை படைத்தது.
அந்த சாதனையை வாரிசு ட்ரெய்லர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாரிசு படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லர் இணைந்து முறியடித்து விட்டதாக தில் ராஜு உருட்டியுள்ளார்.
வாரிசு,
துணிவு
ஒரே
நாளில்
ரிலீஸ்...
FDFS
எப்போது...
மெயின்
ஸ்க்ரீன்
யாருக்கு?:
பரபரப்பில்
ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்
இயக்குர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய பேச்சை எல்லாம் கேட்ட விஜய் ரசிகர்கள் வாரிசு படம் மிகப்பெரிய சம்பவம் செய்யும் என எதிர்பார்த்தனர். ஆனால், ட்ரெய்லர் வெளியிட்ட நிலையில், வெறும் 23 மில்லியன் அப்டேட்டட் வியூஸ் மட்டுமே பெற்று துணிவு ட்ரெய்லர் சாதனையோ பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் சாதனையையோ முந்தவில்லை.

நம்பர் ஒன்
நடிகர் விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் ஜனவரி 4ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியான நிலையில், ஜனவரி 5ம் தேதி மாலை 5 மணிக்கு 32 மில்லியன் வியூஸ் அள்ளி உள்ளது. 2 மில்லியன் லைக்ஸ் கடந்து துணிவு லைக்ஸை முந்தியுள்ளது வாரிசு ட்ரெய்லர் துணிவு ட்ரெய்லரை முந்திவிட்டதாக விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்.

இதுதான் காரணமா
வாரிசு தமிழ் ட்ரெய்லரையும் தெலுங்கு ட்ரெய்லரையும் ஒரே நாளில் வெளியிட்டது தான் காரணம் என்கின்றனர். வாரிசு தெலுங்கு ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் 3.3 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. 23 மில்லியன் மற்றும் 3 மில்லியன் சேர்த்தால் கூட 23 மில்லியன் அப்டேட்டட் வியூஸ் தான் வருகிறது என அஜித் ரசிகர்கள் வெறுப்பேற்றி வந்தனர்.

Unbeatable Ajith
#UnbeatableThunivuTrailer என ஹாஷ்டேக் போட்டு நடிகர் அஜித் தான் விஜய் உடனான போட்டியில் இந்த பொங்கல் ரேஸில் வெல்லப் போகிறார். விஜய் ரசிகர்கள் மெகா சீரியல் என வாரிசு ட்ரெய்லரை பார்த்து கடுப்பான நிலையில் தான் அந்த ட்ரெய்லர் ரெக்கார்டு கூட படைக்கவில்லை என கலாய்த்து வருகின்றனர்.

பழிவாங்கிய ரஜினி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் சர்ச்சை காரணமாக ரஜினிகாந்த் ரசிகர்கள் வாரிசு ட்ரெய்லரை பார்க்கக் கூடாது என்றும் பார்க்கப் போவதில்லை என்றும் அறிவித்து இருந்தனர். அவர்கள் புறக்கணித்த நிலையில் தான் வாரிசு ட்ரெய்லர் வெறும் விஜய் ரசிகர்களின் படையை மட்டும் வைத்தே இந்த வியூஸ் வந்துள்ளது எனக் கூறுகின்றனர்.

தில் ராஜு சம்பவம்
விஜய் ரசிகர்களே போட்டியில் தோற்று விட்டோம் என துவண்டு போன நிலையில், தம்பிகளா நீங்க ரியல் டைம் வியூஸ் கொண்டு வந்தா நான் Cumulative Real Time Views கொண்டு வருவேன் எனக் கூறி 32 மில்லியன் வியூஸ் கடந்து வாரிசு அபார சாதனை படைத்துள்ளது என்றும் விஜய் தான் நம்பர் ஒன் என்றும் நிரூபித்துள்ளார் தில் ராஜு. தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லர்களின் ரியல் டைம் வியூஸ் தான் இந்த ஒட்டுமொத்த வாரிசு ட்ரெய்லர் வியூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

வசூலில் வெல்லப்போவது யார்
அட ட்ரெய்லரை விடுங்க பீஸ்ட் ட்ரெய்லர் சாதனை படைத்தது. ஆனால், படம் விமர்சன ரீதியாக சொதப்பியது. வாரிசு ட்ரெய்லர் வியூஸ் எல்லாம் முக்கியம் இல்லைங்க ஸ்ட்ரெய்ட்டா பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுல பார்த்துக்கலாம்ங்க என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. வாரிசு? துணிவு? வசூலில் யார் வெற்றி என்பதை தாண்டி எந்த தயாரிப்பாளர் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் சொல்வார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.