விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் முத்தம்... யாருக்கு கொடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே இருவரும் வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்


நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

 பாராட்டை பெற்ற சமந்தா

பாராட்டை பெற்ற சமந்தா

ஆனாலும் படத்தின் வித்தியாசமான திரைக்கதை மற்றும் சிறப்பான காட்சிகளையடுத்து படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக கதீஜாவாக நடித்த சமந்தாவின் நடிப்பு மிகுந்த பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது. கண்மணி மற்றும் ராம்போவாக நடித்த நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியும் பாராட்டிற்கு உள்ளாகியுள்ளனர்.

ஜூன் 9ல் திருமணம்

ஜூன் 9ல் திருமணம்

இதனிடையே இந்தப் படத்தை முடித்துவிட்டு திருமணம் செய்ய முடிவெடுத்ததாக முன்னதாக விக்னேஷ் சிவன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப இவர்கள் இருவரது திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இருவரும் இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

அடுத்தடுத்த கமிட்மெண்ட்

அடுத்தடுத்த கமிட்மெண்ட்

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா. இவரது ஓ2 படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. மாயா உள்ளிட்ட படங்கள் போன்று இதுவும் த்ரில்லர் வகையை சேர்ந்தது என்றும் ரசிகர்களுக்கு சிறப்பான த்ரில்லிங் அனுபவத்தை படம் கொடுக்கும் என்றம் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

இதனிடையே அடுத்ததாக அஜித்தை இயக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் அவர் ஈடுபட்டுள்ளார். முன்னதாக அவரது திருமணம் நடைபெறவுள்ளது.

 பிசியான ஜோடி

பிசியான ஜோடி

அடுத்தடுத்த பிராஜக்ட்கள், தயாரிப்பு நிறுவனம் என்று இந்த ஜோடி மிகவும் பிசியாக காணப்படுகிறது. படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அம்மாவிற்கு முத்தம்

இந்நிலையில் இன்றைய தினம் அன்னையர் தினத்தையொட்டி, தனது அன்னையை உச்சி முகர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். கூடவே நயன்தாராவும் இணைந்து விக்னேஷ் சிவனின் அன்னைக்கு முத்தத்தை பரிசளித்துள்ளனர். தனது அன்னையுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

Recommended Video

ரசிகர்களுடன் தியேட்டரில்.. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்த நயன்தாரா, விஜய்சேதுபதி!
வாழ்க்கையை மாற்றிய பெண்கள்

வாழ்க்கையை மாற்றிய பெண்கள்

முன்னதாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்த விக்னேஷ் சிவன், தன்னுடைய வாழ்க்கையில் இரு பெண்கள் தன்னுடைய வெற்றியை தீர்மானித்ததாக தெரிவித்திருந்தார். தன்னுடைய தாய் மற்றும் நயன்தாரா தான் அவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X