»   »  பாவம், விஜய் தாங்குவாரா?: பார்த்து பத்திரமாக இருந்துக்கோங்க

பாவம், விஜய் தாங்குவாரா?: பார்த்து பத்திரமாக இருந்துக்கோங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 61 படக்குழு இந்த கோடை காலத்தில் ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாம்.

மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்பவே மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் திணறி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் 61 படக்குழு ராஜஸ்தானில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாம்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய் 61.

சென்னை

சென்னை

விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. சென்னையில் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகு படக்குழு தற்போது ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

சென்னையை அடுத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு செல்கிறது விஜய் 61 படக்குழு என்று செய்திகள் வெளியாகின. ஆனால் படக்குழு வெயில் மண்டையை பிளக்கும் ராஜஸ்தானுக்கு முதலில் செல்கிறதாம்.

நடிகைகள்

நடிகைகள்

சென்னை வெயிலுக்கே அஸ்ஸு உஸ்ஸு என்று இருக்கும் நடிகைகள் ராஜஸ்தான் வெயிலை தாங்குவார்களா, நிச்சயம் மாட்டார்கள். ஹீரோயின்கள் யாரும் ராஜஸ்தானுக்கு செல்லவில்லையாம்.

அமெரிக்கா

அமெரிக்கா

நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட்டுவிட்டது. சமந்தா, காஜல் அகர்வால் அமெரிக்கா, இங்கிலாந்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்களாம்.

English summary
According to reports, Vijay 61 team is heading for Rajasthan before leaving for the USA and UK schedule.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil