»   »  இரண்டு வாட்டி "தெறி"க்க விட விஜய்- அட்லீ திட்டமா?

இரண்டு வாட்டி "தெறி"க்க விட விஜய்- அட்லீ திட்டமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தெறி படம் 'மீட் யூ இன் தெறி 2' என்று முடிவதாகவும் இதனால் தெறி படத்தின் 2 ம் பாகம் உருவாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருகின்றன.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தெறி. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்கள் உட்பட பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது.


Vijay-Atlee's Theri Sequel

டீசர் வெளியான 3 நாட்களில் இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான் பேர் இந்த டீசரை பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்தியளவில் அதிகம் விரும்பப்பட்ட டீசர் என்ற பெருமையையும் இந்த டீசர் பெற்றுள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் 2 வது பாகம் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் படம் பிடிக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இதனை ஊர்ஜிதம் செய்வதாக கூறுகின்றனர்.


தெறி படம் கடைசியில் 'மீட் யூ இன் தெறி 2' என்று முடிவதாகவும், இதனால் இப்படத்தின் 2ம் பாகத்தில் விஜய்யும், அட்லீயும் மீண்டும் இணைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கனவே அட்லீயின் வேலை செய்யும் விதம் பிடித்துப் போய் நாம் மீண்டும் ஒரு படத்தில் இணையலாம் என்று அட்லீயிடம், விஜய் கூறியதாக தகவல்கள் வெளியானது.


தற்போது அந்தப் படம் ஏன் தெறி படத்தின் 2 வது பாகமாக இருக்கக் கூடாது என்று கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. ஆனால் விஜய், அட்லீ தரப்பிலிருந்து இதற்கு எத விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்பதால் வழக்கம் போல ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் காத்திருக்கலாம்.

English summary
Sources Said After Theri may be Vijay - Atlee once Again Join Hands with Theri Sequel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil