»   »  ரசிகர்கள் சேர்ந்தால் விஜய் தான் அந்த சி.எம்....'மெர்சல்' விழாவில் பார்த்திபன்

ரசிகர்கள் சேர்ந்தால் விஜய் தான் அந்த சி.எம்....'மெர்சல்' விழாவில் பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மெர்சல்' படத்தின் நான்கு பாடல்கள் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Vijay became a CM says parthipan

விஜய் தான் சி.எம் :

மேடையில் பேசிய நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் 'அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்தால் விஜய் தான் இனி சி.எம்' என்றார்.

தனுஷ் பேசும்போது, 'நான் இங்கே விஜய் சாரோடா ஃபேனா வந்துருக்கேன். அவர் தோள் மேல கை போட்டும் பேசுவார்; தோள்ல கை போடவிட்டும் பேசுவார். விஜய் சார் புத்திசாலி; அமைதியானவரும் கூட... அமைதிதான் அவருடைய மிகப்பெரிய ஆயுதம். எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்தான். என்றார்.

Vijay became a CM says parthipan

விஜய்க்கு முன்; விஜய்க்குப் பின் :

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா ருக்மணி பேசும்போது, 'எங்கள் நிறுவனத்தின் வரலாறை விஜய்க்கு முன், விஜய்க்குப் பின்' என இரண்டாகப் பிரித்து எழுதலாம் என்றார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கான்செர்ட் நடைபெற்றது.

English summary
Mersal audio songs was released just now. Vijay became a CM says parthipan in music release function.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil