அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.. ரோபோ சங்கர் மறைவு.. விஜய் இரங்கல்
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு உயிரிந்தார். அவருக்கு வயது 46. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளநிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரோபோ சங்கர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவர், பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால்,கடுமையாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரின் உடல் எடை குறைத்து காணப்பட்டார். பின் அதில் இருந்து மீண்டு மகளுக்கு திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு, சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ரோபோ சங்கர்: இதையடுத்து செவ்வாய் கிழமை அவர் மயங்கி விழுந்ததை அடுத்து மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் அளித்த போதிலும், அவரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜய் இரங்கல் அறிக்கை: இந்நிலையில், நடிகரும், தவெக தலைவருமான நடிகர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











