விஜய் பண்ணது பெரிய தவறு.. வாரிசு படத்துக்கு விழுந்த சவுக்கடி.. பிரபல தயாரிப்பாளர் விளாசல்!
சென்னை: பாகுபலி,கேஜிஎஃப் படங்களுக்கு மானங்கெட்டுப் போய் தமிழ் சினிமாவில் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி அதிக தியேட்டர்களை ஒதுக்கினார்கள்.
ஆனால், தெலுங்கர்கள் அப்படி இல்லை. தங்கள் மொழி நடிகர்கள் மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பது தவறில்லை.
விஜய் பண்ணது தான் பெரிய தவறு தமிழ்நாட்டு இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் விட்டுட்டு டோலிவுட் பக்கம் போனதுக்கு விழுந்த பெரிய சவுக்கடி இது என தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியுள்ள பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது.

விஜய் பண்ணது தவறு
தமிழ் சினிமாவில் விஜய் பெரிய நடிகர் என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அவருக்கு தெலுங்கில் கொஞ்சம் கூட மார்க்கெட்டே இல்லை. விஜய்யை விட சூர்யாவுக்குத் தான் தெலுங்கில் மார்க்கெட் அதிகம். கேரளாவில் தான் விஜய்க்கு மார்க்கெட் இருக்கு. இந்நிலையில், தெலுங்கு பட தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் வாய்ப்பு கொடுத்து விஜய் பெரிய தவறு பண்ணி விட்டார் என தயாரிப்பாளர் கே. ராஜன் அளித்துள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது.

டோலிவுட்டில் கட்டுப்பாடு
தெலுங்கு திரையுலகத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வச்சது தான் சட்டம். அங்கே பெரிய கட்டுப்பாடு இருக்கு. தமிழ் திரையுலகில் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தவொரு கட்டுப்பாடுமே இல்லை. அவங்களோட ஹீரோ தான் வாழணும்னு அவங்க முன்னுரிமை கொடுப்பதில் தவறில்லை. பவன் கல்யாண் மற்றும் பாலகிருஷ்ணா படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விட்டு வாரிசு படத்துக்கு 25 சதவீத தியேட்டர்கள் ஒதுக்கியதே பெரிய விஷயம் என பேசி உள்ளார்.

பாகுபலி, கேஜிஎஃப்புக்கு வாரி கொடுத்தாங்க
தமிழ்நாட்டுல தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ராங்காவே இல்லை. பாகுபலி, கேஜிஎஃப் என எந்த மொழி படம் வந்தாலும், தியேட்டர்களை வாரிக் கொடுக்கிறாங்க அது ரொம்ப மடத்தனம். வந்தாரை வாழ வைக்கிறேன்னு சொல்லிட்டு இங்கே உள்ளவர்களை சாகடிக்கிறாங்க என சாடி உள்ளார்.

125 கோடி சம்பளம் ஏன்
நடிகர் விஜய் தனது சம்பளத்தை 125 கோடி வரை ஏற்றியிருப்பது தயாரிப்பாளர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அதன் காரணமாக அவர் தனது மார்க்கெட்டை பெரிது படுத்த நினைக்கிறார். ஆனால், தமிழ் இயக்குநருக்கும், தமிழ் தயாரிப்பாளருக்கும் லாபம் செல்லும் வகையில் அவர் செயல்பட வேண்டும். அப்படி பண்ணவில்லை, அதன் பயனைத்தான் வாரிசு படத்தின் மூலம் அனுபவிக்க காத்திருக்கிறார் என தயாரிப்பாளர் கே. ராஜன் சாடி உள்ளார்.

அன்சோல்ட் வாரிசு
டோலிவுட்டில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் வாரிசு படத்தை வாங்க ஆட்களே இல்லை என்றும் பல பெரிய தியேட்டர்களும் துணிவு படத்தை வாங்கவே முடிவு செய்துள்ளதாக #UNSoldVarisu ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். வரும் பொங்கலுக்கு பல தடைகளை கடந்து வாரிசு திட்டமிட்டப்படி வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

என்ன செய்யப் போகிறார் விஜய்
வாரிசு படத்திற்கு தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் எழுந்துள்ள பிரச்சனைகளை எப்படி சமாளித்து பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவுடன் எப்படி போட்டிப் போடகிறார் என்றும் இருவரும் நேரடியாக மோதவுள்ள நிலையில், யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபிக்கும் நெருக்கடியும் இருப்பதால், இந்த முறை போட்டி ரொம்பவே டஃப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











