»   »  'விஜய்யோட போட்டோ எடுக்கணுமா... ரூ 2 ஆயிரம் கொடுங்க..' - இப்படி ஒரு வசூல் வேட்டை!!

'விஜய்யோட போட்டோ எடுக்கணுமா... ரூ 2 ஆயிரம் கொடுங்க..' - இப்படி ஒரு வசூல் வேட்டை!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'விஜய் வருகிறார்... அவருடன் போட்டோ எடுத்துக்க ரூ 2000 கொடுங்க' என கூவிக் கூவி வசூல் செய்த கும்பலைத் தேடி வருகின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

இதுகுறித்து சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் தமிழன் ஆ.பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை:

போட்ட எடுக்க டேட்

போட்ட எடுக்க டேட்

நடிகர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தன்னுடன் போட்டோ எடுப்பதற்கான தேதியை அறிவித்துள்ளார். ஆனால் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் சேலம் மாவட்டத்திற்கான தேதியை இன்னும் அவர் அறிவிக்கவில்லை.

வசூல் வேட்டையில் சிலர்

வசூல் வேட்டையில் சிலர்

இதைப் பயன்படுத்தி சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கொண்டலாம்பட்டி, மல்லூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை நேரில் அழைத்துச் சென்று நடிகர் விஜயுடன் போட்டோ எடுத்து தருவதாக கூறி ரூ.1000, ரூ.2000 ஆயிரம் என வசூல் வேட்டையில் சிலர் ஈடுபட்டு வருவதாக மாவட்ட தலைவருக்கு புகார்கள் வந்துள்ளன.

பிடித்து ஒப்படையுங்கள்

பிடித்து ஒப்படையுங்கள்

ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் மோசடி கும்பல் போனில் பேசினாலோ அல்லது நேரில் வந்து பணம் வசூல் செய்தாலோ மாவட்ட தலைமை அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த மோசடி கும்பலை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.

தேதி அறிவித்த பிறகு சொல்கிறோம்

தேதி அறிவித்த பிறகு சொல்கிறோம்

சேலம் மாவட்ட ரசிகர்களுக்கு தேதி அறிவித்த பிறகு மாவட்ட தலைமை மூலம் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

English summary
Some of Vijay fans in Salem district have cheating public by collecting money from public for take pics with Vijay during his Salem visit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil