இனிமே ஜானி மாஸ்டர் வேண்டாம்.. ஷோபி தான் வேணும்.. ரஞ்சிதமே பாடலால் கடுப்பான விஜய் ரசிகர்கள்!

சென்னை: அரபிக் குத்து பாடலிலேயே நடிகர் விஜய்யை கம்பியை பிடித்துக் கொண்டு பஸ்ஸில் தொங்குவது போல மாற்றி விட்டார் என ட்ரோல்கள் கிளம்பிய நிலையில், வாரிசு படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சிதமே பாடலுக்கும் நான் தான் எங்க அண்ணாவுக்கு டான்ஸ் பண்ணுவேன் என வச்சு செய்து விட்டார் என விஜய் ரசிகர்களே கடுப்பாகி உள்ளனர்.

வாரிசு படத்தில் அதிக எதிர்பார்ப்பு இல்லாத ஜிமிக்கி பொண்ணு பாடல் மற்றும் செலிபிரேஷன் ஆஃப் வாரிசு பாடல்களில் ஷோபி மாஸ்டர் நடனமைத்த ஸ்டெப்ஸ் நடிகர் விஜய்க்கு பக்காவாக பொருந்தி போய் ரசிக்கும் படியாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஷோபி மாஸ்டரை வண்டியில் ஏத்து, ஜானி மாஸ்டர் மேல வண்டியை விட்டு ஏத்து என மீம்களையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

ஓவர் பில்டப் ஜானி

ஓவர் பில்டப் ஜானி

அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ உலகளவில் ஹிட் ஆன நிலையில், அதன் நடன வீடியோவும் டிரெண்டானது. ஆனால், நடிகர் விஜய்க்கு ஜானி மாஸ்டர் போட்ட சில ஸ்டெப்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ட்ரோல் செய்யப்பட்டன. இதுக்கு மேல இவன் நமக்கு வேணாம்ணே என ரசிகர்கள் மீம் போட்டு எச்சரித்த நிலையிலும் மீண்டும் வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பை விஜய் வழங்கி இருந்தார்.

மாஸ் அண்ட் கிளாஸ்

மாஸ் அண்ட் கிளாஸ்

நடிகர் விஜய் ஸ்டெப்ஸ் போட்டு நடனம் ஆடினாலே அவரது சார்மிங் கொஞ்சம் கூட குறையாத அளவுக்கு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடனம் ஆடுவார். ஆனால், ஜானி மாஸ்டர் கம்பியை பிடித்துக் கொண்டு தொங்குவது போன்றும் துணி துவைப்பது போன்றும் ஸ்டெப்களை போட்டு விஜய்யின் பிரம்மாஸ்திரமான நடனத்திலேயே கை வைக்க ஆரம்பித்து விட்டார்.

ரஞ்சிதமே பாடலும்

ரஞ்சிதமே பாடலும்

அரபிக் குத்து பாடலுக்கு என்ன பிரச்சனையை ஜானி மாஸ்டர் தனது கொரியோகிராஃபி மூலம் உருவாக்கினாரோ அதே போன்ற விஷயத்தை ரஞ்சிதமே பாடலுக்கும் உருவாக்கி விட்டார் என விஜய் ரசிகர்களை திட்டி வருகின்றனர். ரசிகர்களுக்காக கடைசி ஒரு நிமிடம் நிற்காமல் விஜய் நடனம் ஆடினாலும், புதிய ஸ்டெப்களையோ ரசிக்கும் படியான ஸ்டெப்களையோ அவர் அமைக்கவில்லை என புகார்கள் கிளம்பி உள்ளன.

ஷோபி சூப்பர்

ஷோபி சூப்பர்

திருப்பாச்சி முதல் தெறி, மெர்சல், பிகில் என பல விஜய் படங்களுக்கு நடனம் அமைத்துள்ள ஷோபி மாஸ்டர் வாரிசு படத்தில் ஜிமிக்கி பொண்ணு மற்றும் செலிபிரேஷன் ஆஃப் வாரிசு உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அந்த இரு பாடல்களிலும் விஜய்யின் நடனம் வித்தியாசமாகவும் அனைவரும் ரசிக்கும் படியாகவும் உள்ளதாக விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஜிமிக்கி பொண்ணு டான்ஸ்

ஜிமிக்கி பொண்ணு டான்ஸ்

ஜிமிக்கி பொண்ணு பாடலில் நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே ஷோபி மாஸ்டரின் சூப்பரான கொரியோகிராஃபியில் கலக்கலாக நடனமாடி உள்ளனர். சிம்டாங்காரன், ஆளப் போறான் தமிழன் பாடல்களுக்கு நடனம் அமைத்த ஷோபி மாஸ்டரே ரஞ்சிதமே பாடலுக்கும் நடனம் அமைத்து இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X