For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கட்டக் கடேசி சீட்டில் உட்கார வைத்து விஜய்யை நோகடிச்சுட்டாங்களாமே...!

  By Sudha
  |

  சென்னை: சென்னையில் நேற்று நடந்த இந்தியத் திரைப்படத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், நடிகர் விஜய்யை அவமானப்படுத்தும் வகையில் சில நிகழ்வுகள் நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.

  அவரை விட இளைய நடிகர்களுக்கெல்லாம் முன்வரிசைகளில் இடம் கொடுத்தவர்கள், விஜய்க்கு மட்டும் கடைசி வரிசையி்ல் ஒரு ஓரமாக சீட் கொடுத்து இன்சல்ட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

  இதனால் முகம் கறுத்துப் போன விஜய் இறுகிய முகத்துடன் யாரிடமும் புகார் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தாராம்.

  ஏகப்பட்ட குளறுபடிகள்

  ஏகப்பட்ட குளறுபடிகள்

  சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததாக பலரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

  இளையராஜா, ரஜினி, கமலுக்கே...

  இளையராஜா, ரஜினி, கமலுக்கே...

  இசைஞானி இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு முக்கியத்துவம் இல்லை இந்த விழாவில். குறிப்பாக விருது பெற்றவர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின்போது ரஜினி, கமல், இளையராஜா போன்ற ஜாம்பவான்களை பின்னால் நிறுத்தி வைத்து விட்டனர். இது அவர்களது ரசிகர்களை புண்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

  விஜய்க்கு வந்த சோதனை

  விஜய்க்கு வந்த சோதனை

  இந்த நிலையில் நேற்று விஜய்க்கு அவமரியாதை நடந்ததாக கூறுகிறார்கள்.

  கடைசி நேரத்தில் அழைப்பு

  கடைசி நேரத்தில் அழைப்பு

  நேற்று நடந்த நிறைவு விழாவுக்கு கடைசி நேரத்தில்தான் விஜய்க்கு அழைப்பு போனதாம்.

  வேண்டா வெறுப்பாக வந்த விஜய்

  வேண்டா வெறுப்பாக வந்த விஜய்

  இந்த விழாவுக்கு வருவதை முதலில் விஜய் விரும்பவில்லையாம். ஆனால் வராமல் போனால் ஏதாவது பிரச்சினை செய்வார்களோ என்பதால்தான் வேண்டா வெறுப்பாக வந்தாராம் அவர்.

  கடைசி சீட்

  கடைசி சீட்

  வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சார், உங்களுக்கு அங்க சீட் ஒதுக்கியிருக்கு என்று கூறிய ஏற்பாட்டாளர்கள் கூறிய திசையைப் பார்த்த விஜய் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அது கடைசி வரிசையாம். முன்வரிசையில் பல இளம் நடிகர்கள் அமர்ந்திருந்தனர்.

  அமைதியாக

  அமைதியாக

  ஆனாலும் எந்த முனுமுனுப்பும் இல்லாமல் தனது சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டாராம் விஜய். முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாராம் விஜய். ரொம்ப நேரம் தனியாகவும் அமர்ந்திருக்கிறார் பாவம்.

  வாங்க, சீயான்...!

  வாங்க, சீயான்...!

  அதன் பிறகு சிறிது நேரம் கழித்து விக்ரம் வந்து அவர் பக்கத்தில் அமர்ந்தார். இதனால் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டார் விஜய்.

  விஜய்க்காக இடம் மாறி வந்த விக்ரம்

  விஜய்க்காக இடம் மாறி வந்த விக்ரம்

  முதலில் விக்ரமுக்கு முன்வரிசையில்தான் சீட் கொடுத்திருந்தனர். ஆனால் விஜய் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்த அவர் தனது சீட்டை விட்டு எழுந்து விஜய் அருகே போய் அமர்ந்தாராம். இருவரும் நீண்ட நேரம் பேசியபடி இருந்தனர்.

  ஐஸ்வர்யா தனுஷும்

  ஐஸ்வர்யா தனுஷும்

  அதேபோல விஜய்க்கு அருகே தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷும் அமர்ந்தார்.

  பாரதிராஜா, வடிவேலு சாதனையாளர்கள் இல்லையோ...!

  பாரதிராஜா, வடிவேலு சாதனையாளர்கள் இல்லையோ...!

  இந்த நான்கு நாள் விழாவில் மாபெரும் சாதனைகள் படைத்த பலரை அரசு மறந்து விட்டதாக இன்னும் திரையுலகில் முனுமுனுப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர், வடிவேலு, எஸ்.ஜானகி ஆகியோர் கெளரவிக்கப்படவில்லையே என்று பலரும் மனம் புழுங்கிக் கூறுகின்றனராம்.

  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கெளரவம் இல்லை

  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கெளரவம் இல்லை

  அதேபோல இந்தியத் திரையுலகுக்குப் பெருமை தேடித் தந்தவரான ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த விழாவில் கெளரவிக்கப்படவில்லை. 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒரே இந்தியர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பி.சுசீலாவையும் மறந்து விட்டனர்...

  English summary
  The four-day Centenary Celebrations of Indian Cinema has successfully come to an end on Tuesday (September 24). The closing ceremony was attended by some of the big names of South films along with President Of India, Pranab Mukherjee and Tamil Nadu Chief Minister Jayalalitha. As in every function, now, the drawbacks of the event have come under scanner. The first among them is that there are murmurs on stars being treated badly by the organisers. There are reports that Illayathalapathy Vijay was not treated well and was insulted at the Centenary Celebrations of Indian Cinema. Prior to the event, there were doubts on the Velayudham star making it to the event. It was because the actor was not happy with the industry men and the state government because nobody stood by him when his movie Thalaivaa faced release problems.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X