Vijay: புலி பட ரிலீஸில் பிரச்னை.. கழட்டிவிட்ட விஜய்.. தயாரிப்பாளர் இப்படி புலம்புகிறாரே?

புலி பட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், விஜய் உடனான அனுபவங்கள், ஸ்ரீதேவியை நடிக்க வைத்தது, சுதீப் ஒப்பந்தம், மற்றும் வருமான வரி சோதனை சவால்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். பத்திரிக்கையாளராக இருந்து தயாரிப்பாளராக மாறிய அவரது பயணம், ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர்கள், உலகத் தரம் வாய்ந்த கிராபிக்ஸ் என புலி பட உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்துகிறது.

சென்னை: கடந்த 2015ஆம் ஆண்டு விஜய், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, கிச்சா சுதீப் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் புலி. இந்த படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கினார். படத்தை விஜய்யின் நீண்ட நாள் பி.ஆர்.ஓவாக பணியாற்றிய பி.டி. செல்வகுமார் தயாரித்தார். புலி படத்தை தயாரிக்கச் சொல்லி தனக்கு அறிவுரை வழங்கியதே விஜய் தான் எனவும் அந்த படத்திற்கு பின்னர் அவர் தன்னை மதிக்கவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் பத்திரிகையாளரான பி.டி. செல்வகுமார், அதன் பின்னர் விஜய்யின் பி.ஆர்.ஓவாக பணியாற்றினார். அதையடுத்துதான் புலி படத்தை தயாரித்தார். சென்னையில் விஜய் என்னை மதிப்பதில்லை என்று புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு தயாரிப்பாளராக அவர் சந்தித்த சவால்களைப் பற்றி மனம் திறந்து பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Vijay Puli Movie Producer P T Selvakumar Opens About Vijay Which Is Controversy
Photo Credit:

பி.டி.செல்வகுமார், பத்திரிக்கையாளராக இருந்து திரைப்படத் தயாரிப்பாளராக மாறிய அனுபவத்தை விவரித்தார். "விஜய்யின் புலி படத்தை தயாரிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சிம்புதேவன் டைரக்ட் பண்றாருன்னு விஜய் தான் என்னிடம் சொன்னார். முதலில் அந்த படத்திற்கு நான் பி.ஆர்.ஓ வேலையைச் செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன் ஆனால், படம் தயாரிக்கச் சொல்ல தான் விஜய் என்னை அழைத்ததாகவும் கூறினார். நான் படத்தை தயாரிக்கும்போது வில்லி கதாபாத்திரத்தில் ஷோபனாவை நடிக்க வைக்க யோசித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் நான் அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் என்று சொன்னேன்.

ஸ்ரீதேவி: புலி படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைத்தது குறித்து அவர் கூறுகையில், "ஸ்ரீதேவி அவர்களின் தீவிர ரசிகன் நான். 16 வயதில் அவங்களுடைய படத்தை 15 முறை பார்த்திருக்கேன். அவங்களோட அழகைப் பற்றி சொன்னதும், அவங்க அப்படியே மெல்ட் ஆயிட்டாங்க. மூன்று நாட்கள் மும்பையில் தங்கி, அவரிடம் பேசி பேசி சம்மதிக்க வைத்து, மூன்றாவது நாள் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்தேன்" என்றார். மேலும், சுதீப்பை நடிக்க வைக்க அவரிடம் கேட்டபோது, விஜய்யிடம் என்னை அடிவாங்க கூப்பிடுகிறாயா என்று கேட்டு முதலில் மறுத்தார். அதன் பின்னர் அவருக்கு பெரிய சம்பளத்தை பேசி பாதி பணத்தை கொடுத்ததையும் குறிப்பிட்டார். "இது ஒரு பேன் இந்தியா படம். கிராபிக்ஸ் எல்லாம் வேர்ல்ட் லெவல்ல பண்ணிருக்கோம். ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர்ஸை எல்லாம் கொண்டு வந்தோம்" என்று பெருமையுடன் கூறினார்.

Vijay Puli Movie Producer P T Selvakumar Opens About Vijay Which Is Controversy
Photo Credit:

சந்திக்காத விஜய்: புலி படத்தின் ரிலீஸுக்கு முந்தின நாள் நடந்த வருமான வரி சோதனையைப் பற்றி அவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். " வருமான வரி சோதனை நடைபெற்றதால் படம் ரிலீஸ் ஆகாது என பலரும் நினைத்துக் கொண்டார்கள். அவ்வாறு செய்தி எல்லாம் வெளியானது. விசாரணை முடிந்து வெளியே வந்ததும் என் படம் ரிலீஸ் இல்லன்னு சொல்ல யாருக்கு உரிமை இருக்குன்னு கேட்டேன். என் தலைய அடமானம் வைத்தாதவது என் படட்த்தை ரிலீஸ் செய்வேன் என்று முடிவெடுத்து படத்தை ரிலீஸ் செய்தேன். இந்த சம்பவத்திற்குப் பின்னர் விஜய் என்னைச் சந்திக்கவில்லை. அவரைச் சுற்றி இருந்த நபர்கள் நான் அவரைச் சந்திக்கவும் விடவில்லை. படத்திற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்களைக் கூறினார்கள். வேறு யாராவது இருந்திருதால் இறந்திருப்பார்கள். ஆனால் நான் மிகவும் தைரியத்துடன் அதில் இருந்தும் மீண்டு வந்துள்ளேன்.

More from Filmibeat

Read more about: tamil cinema puli vijay sridevi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X