விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ்...தீபாவளிக்கா? பொங்கலுக்கா?...அசர வைத்த லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடத்தப்பட்டது. சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில், ஃபஸ்ட்லுக் மற்றும் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதனை விஜய் ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கினர். ஒரு மணி நேரத்திலேயே கிட்டதட்ட 3 லட்சம் லைக்குகளை பெற்றது.

விறுவிறுப்பாக பீஸ்ட் படப்பிடிப்பு
தற்போது இரண்டாம் கட்டமாக விஜய், பூஜா ஹெக்டே பங்கேற்கும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது. இதற்காக ஜனா மாஸ்டர் சமீபத்தில் நடன பயிற்சி அளித்தார். பீஸ்ட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

பீஸ்ட் தீபாவளி ரிலீசா
இதனால் பீஸ்ட் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் பரவியது. ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைய உள்ளது.

பொங்கல் தான் ராசியா
ஆனால் லேட்டஸ்டாக வெளியான தகவலின் படி பீஸ்ட் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படாதாம். மாறாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்ட மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்ததால், பீஸ்ட் படத்தையும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கே ரிலீஸ் செய்ய போகிறார்களாம்.
Recommended Video

ஃபஸ்ட் சிங்கிள் எப்போது
விஜய் பிறந்தநாளன்று பீஸ்ட் ஃபஸ்ட்லுக்கை வெளியிட்டது போல், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16 அன்று படத்தின் ஃபஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்ய உள்ளனராம். அத்துடன் அக்டோபர் மாதத்திற்கு முன்பாகவே படப்பிடிப்பை முழுவதுமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











