வாரிசு விஜய் பற்றி வந்த ஹாட் தகவல்...ஒன்னு இல்ல ரெண்டு...அப்போ மாஸா இருக்குமே
சென்னை : விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் தற்போது அவர் நடித்து வரும் வாரிசு. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் குடும்ப சப்ஜெக்ட்டில் நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இது பிரெஞ்சு படத்தின் காப்பி என்று சொல்லப்பட்டாலும், இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதால் விஜய்யின் கேரக்டர் மற்றும் படத்தின் கதை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வம்சி பைடபள்ளி இயக்கத்தில் மெகா நட்சத்திர பட்டாளம் நடிக்கும் வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளுக்கு டைட்டில், போஸ்டர் வந்ததை போல் அடுத்த அப்டேட் எப்போ வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர் வேற இருக்காரா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாகவும், அவர் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் கடந்த சில நாட்களாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது. அதோடு, வாரிசு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவை ரெக்கமன்ட் செய்ததே விஜய் தான் என்றும் சொல்லப்படுகிறது.

வாரிசு படத்தில் விஜய்யின் பெயர்
தற்போது விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவிற்கு வாரிசு படம் பற்றி இரண்டு ஹாட் தகவல்கள் வெளியில் கசிந்துள்ளன. இதில் முதலாவது தகவல் என்னவென்றால், வாரிசு படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் விஜய் ராஜேந்திரன் என சொல்லப்படுகிறது. அதாவது விஜய், விஜய் என்ற பெயரிலேயே நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னொரு தகவல் என்ன
மற்றொரு தகவல் என்னவென்றால், விஜய் நடிக்கும் இரட்டை வேடத்தில் ஒன்று மாஸ் ஹீரோ கேரக்டர். இந்த கேரக்டர் அப்ளிகேஷன் டிசைனர் அல்லது ஆப் டெவலப்பிங் தொடர்பான பணியில் இருக்கும் நபராக நடித்து வருகிறாராம்.

இப்போ என்ன சீன் எடுக்குறாங்க
வாரிசு படத்தின் ஷுட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் விஜய் - ராஷ்மிகா இடையேயான பல மிக முக்கியமான சீன்கள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது நடந்து வரும் ஷுட்டிங்கில் பிரபு, ஜெயசுதா, சரத்குமார், குஷ்பு, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா கிருஷ், சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு என அனைவரும் கலந்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











