அட இவருமா... மனைவியுடன் சேர்ந்து டைரக்டர் அட்லீ செய்த காரியத்தை பார்த்தீங்களா ?

சென்னை : மனைவி பிரியாவுடன் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு வரும் டைரக்டர் அட்லீ, தற்போது செய்துள்ள காரியத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். அட...இவர் கூடவா என கேட்டு, லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Recommended Video

அட இவருமா... மனைவியுடன் சேர்ந்து டைரக்டர் அட்லீ செய்த காரியத்தை பார்த்தீங்களா ?

சிறிது இடைவேளைக்கு பிறகு நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கி டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அட்லீ. முதல் படமே கமர்ஷியல் ஹிட் கொடுத்ததால், விஜய்யை வைத்து வரிசையாக தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் வெற்றி படங்களை கொடுத்தார். இதனால் மிக குறுகிய காலத்திலேயே ஹிட் பட டைரக்டர் என்ற பெயரை பெற்று, டாப் டைரக்டர்கள் லிஸ்டிலும் இடம் பிடித்தார் அட்லீ.

 ஷாருக்கானை இயக்கும் அட்லீ

ஷாருக்கானை இயக்கும் அட்லீ

கோலிவுட்டில் விஜய்யுடன் இணைந்து வரிசையாக பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கி வருகிறார் அட்லீ. இந்த படத்தின் ஷுட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ஷாருக்கானின் மகன் ஆரியான் போதை வழக்கில் கைது செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சனை ஒரு வழியாக சரியாகி வரும் நிலையில் இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகியதாக கூறப்பட்டது.

சர்ச்சையில் சிக்கிய அட்லீ மனைவி

சர்ச்சையில் சிக்கிய அட்லீ மனைவி

முதல் படமான ராஜா ராணி வெற்றி பெற்றதுமே தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான பிரியாவை திருமணம் செய்து கொண்டார் அட்லீ. திருமணத்திற்கு பிறகு அடிக்கடி கணவர் உடனான ரொமான்டிக் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரியா. அப்படி படுக்கை அறையில் இருக்கும் போட்டோ ஒன்றை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் பிரியா.

அட இவருமா...வேற லெவல் தான்

அட இவருமா...வேற லெவல் தான்

இருந்தாலும் கணவருடன் பார்க்கில் டைட்டானிக் ரோஸ் ரேஞ்ஜிற்கு நுனி விரலில் நின்ற அழகிய போட்டோக்களை வெளியிட்டு, தனக்குள் டான்ஸ் திறமை இருப்பதாக கேப்ஷன் பதிவிட்டிருந்தர். இந்நிலையில் மனைவி பிரியாவை தொடர்ந்து அட்லீ, வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மனைவியுடன் சேர்ந்து பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்டுள்ளார் அட்லீ. இதை பார்த்து அட இவருமா...இவரா இவ்வளவு சூப்பராக டான்ஸ் ஆடுகிறார். இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

தளபதி 67 டைரக்டர் இவரா

தளபதி 67 டைரக்டர் இவரா

விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தையும் இயக்க போவதாக கோலிவுட்டில் அரசல் புரசலாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் பட பாடலுக்கு மற்ற பிரபலங்களை போல் அட்லீயும் ஆடி அசத்தியதுடன், வீடியோவையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X