கொரோனா லாக்டவுனுக்கு பிறகு.. தியேட்டரில் 50வது நாள் கடந்த மாஸ்டர்.. தெறிக்கும் #Master50Days

சென்னை: கடந்த ஆண்டு இதே மார்ச் மாதம் தான் தியேட்டர்களுக்கு பெரிய பூட்டாக போடப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தான் அந்த சங்கிலியை தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பலமாக உடைத்தது.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த மாஸ்டர் திரைப்படம் 50வது நாளை திரையரங்குகளில் கடந்ததை ரசிகர்கள் #Master50Days என்கிற ஹாஷ்டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

மக்களை வரவழைத்த மாஸ்டர்

மக்களை வரவழைத்த மாஸ்டர்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. தீபாவளிக்குத் தான் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், பெரிய படங்களான சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்டவை ஒடிடி தளங்களிலேயே வெளியாகின. சின்ன படங்கள் வெளியானாலும் தியேட்டர்களுக்கு மக்கள் செல்ல விரும்பவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களை தியேட்டருக்கு வரவழைத்தது.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, மாஸ்டர் மகேந்திரன், சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

16 நாட்களிலேயே

16 நாட்களிலேயே

100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, கடைசி நேரத்தில் மத்திய அரசு உத்தரவின் பேரில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தது. கடந்த ஜனவரி 13ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 16வது நாளிலேயே அமேசான் பிரைமில் ஒளிபரப்பானது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

அமேசான் பிரைமில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகம் உள்ள மக்களின் ஆதரவை பெற்றது. தியேட்டருக்கு சென்று படம் பார்க்க விரும்பும் ரசிகர்களை திரையரங்கிலும் தொடர்ந்து கொண்டாட வைத்து வருகிறது மாஸ்டர் திரைப்படம். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு வெளியான படங்களில் நல்ல வரவேற்புடன் 50வது நாளை மாஸ்டர் கடந்துள்ளது.

50வது நாள் கொண்டாட்டம்

50வது நாள் கொண்டாட்டம்

ஒடிடியில் வெளியான பிறகும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கிலும் 50வது நாளை வெற்றிகரமாக கடந்துள்ளதை விஜய் ரசிகர்கள் #Master50Days என்கிற ஹாஷ்டேக்கை போட்டு கொண்டாடி வருகின்றனர். மேலும், தளபதி 65 படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X