ஜப்பானில் வெளியாகும் மாஸ்டர்… இண்டர்நேஷனல் லெவலில் மஜா செய்யும் விஜய்
சென்னை: விஜய் நடிப்பில் 2021 பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்த மாஸ்டர் சூப்பர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையைக் கிளப்பியது.
விரைவில் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் 'தளபதி 67' உருவாகவுள்ள நிலையில், மாஸ்டர் ஜப்பானில் வெளியாகவுள்ளது.

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி
மாநகரம், கைதி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்தார். அப்படி அவர்கள் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. விஜய் ஜேடி என்ற புரோபசர் கேரக்டரில் நடிக்க, அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார். லோகேஷின் வழக்கமான ஆக்சன் ட்ரீட்டாக வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருந்தது. அந்த நிலையிலும் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வசூலை குவித்தது மாஸ்டர்.

மேனரிசத்தில் கலக்கிய விஜய்
ஜேடி என்ற புரோபசர் கேரக்டரில் விஜய்யின் காஸ்ட்யூம், மேனரிசம், ஸ்டைல் எல்லாமே ரசிகர்களை அதகளப்படுத்தியது. அதுமட்டும் இல்லாமல் விஜய் சேதுபதியின் வில்லத்தனம், அனிருத்தின் மியூசிக் எல்லாமே மாஸ்டர் படத்தை கொண்டாட வைத்தது. கொரோனாவுக்கு பின்னர் துணிச்சலாக கெத்துடன் வெளியான முதல் படமும் மாஸ்டர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் தற்போது ஜப்பானில் வெளியாகவுள்ளது.

ஜப்பானில் வெளியாகும் மாஸ்டர்
விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் காணப்படும் நிலையில், இப்போது மாஸ்டர் படம் ஜப்பானில் வெளியாகிறது. அதுவும் ஜப்பான் மொழியிலேயே டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ள மாஸ்டருக்கு 'Sensei' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன் போஸ்டர்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஜப்பான் நாட்டில் நவம்பர் 18ம் தேதி ரிலீஸாகவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் 'தளபதி 67' படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அடுத்த அப்டேட்
சில தினங்களுக்கு முன்னர் ராஜமெளலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ஜப்பானில் வெளியானது. மேலும், முதல் நாளிலேயே ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்து கெத்து காட்டியது. இந்நிலையில், தற்போது விஜய்யின் மாஸ்டர் படமும் ஜப்பானில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து படம் தான், ஜப்பான் நாட்டில் இந்திய மொழிப் படங்களுக்கான மார்க்கெட்டை தொடங்கி வைத்தது. அதனைத் தொடர்ந்து இப்போது பல தென்னிந்திய படங்கள் ஜப்பானில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தளபதி 67 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











