»   »  அல்ட்ரா மாடர்ன்... அசத்தல் கிராமத்து இளைஞன்... விஜய்யின் மெர்சல் லுக்ஸ்!

அல்ட்ரா மாடர்ன்... அசத்தல் கிராமத்து இளைஞன்... விஜய்யின் மெர்சல் லுக்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் இதுவரை நடித்த 60 படங்களிலும் இல்லாத ஒரு ஈர்ப்பும் கம்பீரமும் மெர்சல் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களில் பார்க்க முடிகிறது.

அட்லீ இயக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் நேற்று வெளியாகின. தலைப்பும் போஸ்டர்களும் சமூக வலைத் தளங்களில் வைரலாகிவிட்டன. நேற்றிலிருந்து ட்விட்டரில் மெர்சல்தான் ட்ரெண்டிங்.

பாராட்டு

பாராட்டு

விஜய்யை விமர்சிப்பவர்கள்கூட, இந்தப் படத்தில் விஜய்யின் தோற்றத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இரண்டாவது போஸ்டர்

இரண்டாவது போஸ்டர்

முதலில் வெளியான போஸ்டரில் விஜய் ஒரு கிராமத்து இளைஞராக முறுக்கு மீசையும் கட்டுடம்புடனும் காட்சி தந்தார். சில மணி நேரங்களில் இரண்டாவது போஸ்டர் வெளியானது. அதில் நகரத்து இளைஞராக, சீட்டுக் கட்டைத் தெறிக்க விடுவதுபோல காட்சி தந்தார்.

மூன்று தோற்றங்கள்

மூன்று தோற்றங்கள்

இந்த இரு வேடங்களைத் தவிர மூன்றாவது கெட்டப்பும் விஜய்க்கு இருப்பதாகவும், அது படத்தில் இனிய அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் படக்குழு சஸ்பென்ஸ் வைக்கிறது.

தளபதிக்கு வாழ்த்துகள்

தளபதிக்கு வாழ்த்துகள்

அதே போல இளையதளபதியிலிருந்து தளபதியாக மாறியிருக்கும் விஜய்க்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர் ரசிகர்களும் திரையுலகினரும்.

English summary
Vijay's second look in Mersal movie has been revealed yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil