ட்விட்டரில் மாஸ் காட்டிய விஜய்யின் அந்த செல்ஃபி.. மிரட்டல் சாதனை.. அதிகாரபூர்வ அறிவிப்பு!
சென்னை: மாஸ்டர் ஷூட்டிங்கின் போது, நடிகர் விஜய் வெளியிட்ட செல்ஃபி போட்டோ, 2020ஆம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட போட்டோவாக ட்விட்டர் அறிவித்துள்ளது.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்துள்ளார்.
மாளவிகா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு உட்பட பலர் நடித்துள்ளனர்.

நெய்வேலி ஷூட்டிங்
இதன் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தபோது, நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்காக, நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து நடிகர் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்தனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. சோதனைக்குப் பின் நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டார் விஜய்.

பேருந்தில் ஏறி
இந்த வருமான வரி சோதனைக்குப் பிறகு, நடிகர் விஜய்யைப் பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் நெய்வேலியில் கூடினர். ஷூட்டிங் நடந்த பகுதியில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய், படப்பிடிப்புத் தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறி ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்தார், விஜய்.

அதிகாரபூர்வ கணக்கு
இந்த செல்ஃபி, நடிகர் விஜய்யின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இது வைரலானது. ஏராளமான ரசிர்கள் இதை ரீட்வீட் செய்தனர். இந்நிலையில், இந்த செல்ஃபி ட்விட்டரில் இந்திய அளவில் அதிகமானவர்களால் ரீ-ட்வீட் செய்யப்பட்டது என்று கடந்த சில தினங்களுக்கு முன், அறிவிக்கப்பட்டது.

அதிமான ரீ-ட்வீட்
இதை விஜய் ரசிகர்கள், தனி ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் கொண்டாடினர். இந்நிலையில் அந்த செல்ஃபி புகைப்படம், 2020 ஆம் ஆண்டில் அதிகமானவர்களால் ரீ-ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என ட்விட்டர் நிறுவனம், இப்போது அறிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம்
இதை அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். இதற்காக #VIJAYRuledTwitter2020 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். அதில், தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











