»   »  எதிரிகள் இல்லன்னா வாழ்க்கை போரடிச்சிடும் நண்பா! - இது விஜய் தத்துவம்

எதிரிகள் இல்லன்னா வாழ்க்கை போரடிச்சிடும் நண்பா! - இது விஜய் தத்துவம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த, ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள மெர்சல் ஆடியோ விழாவில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார்.

100 வது படம் தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் 25 வது வருடத்தில் அடியடுத்து வைக்கும் ரகுமானுக்கு வாழ்த்துக்கள் சொல்லிப் பேசத் தொடங்கினார். ஆனால் அரசியல் பேச்சை கவனமாகத் தவிர்த்தார் விஜய்.

Vijay's possitive speech at Mersal audio launch

தனது பேச்சில், "வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அத விட்டு விலகி இருக்கிறதுதான் சரியானதாக இருக்கும். ஆனாலும், அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள்.

நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும்தான். எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா," என்று பேசினார்.

English summary
Actor Vijay says that there is no enemies life would become boring.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X