Don't Miss!
- News
ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேருமே வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க.. ‘ட்விஸ்ட்’ இருக்கு.. ஜான் பாண்டியன் சொல்றாரே!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Sports
45 பந்துகளாக பவுண்டரிகள் இல்லை.. டெஸ்ட் மேட்ச் போல் டி20 ஆடிய இந்தியா..கடைசி ஓவரில் திரில் வெற்றி
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரசிகர்கள் எதிர்பார்த்த கொண்டாட்ட தருணம்.. சென்னையில் துவங்கிய தளபதி 67 படத்தின் சூட்டிங்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் பொங்கலையொட்டி வாரிசு படம் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியிடப்பட்டது.
ஆயினும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்திற்குத்தான் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
800
கோடி
எங்கே..
187
கோடி
எங்கே..
சூப்பர்ஸ்டார்
ஆக
ஆசைப்படலாமா
விஜய்..
மீசை
ராஜேந்திரன்
விளாசல்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியானது பீஸ்ட். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றியது. தொடர்ந்து தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீடு
இந்தப் படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக் கொண்டு ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார் விஜய். இன்னும் சில தினங்களில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமா, குஷ்பூ, ராதிகா, ஷாம் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

தளபதி 67 படத்தின் சூட்டிங்
மிகுந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது. படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விஜய் படங்களுக்கே உரிய ஆக்ஷன், காமெடி என சகலத்தையும் படத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் படக்குழு அப்டேட்டியுள்ளது. இந்���ிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார் விஜய்.

எதிர்பார்ப்பில் தளபதி 67 படம்
வாரிசு படத்தை காட்டிலும் மிகுந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் லோகேஷின் வ��க்ரம் படம் ஏற்படுத்திய சக்சஸ் அடுத்ததாக தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சென்னையில் சூட்டிங்
இந்தப் படத்தின் அறிவிப்பை மேற்கொள்ளாமல் தொடர்ந்து தாமதம் செய்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இதனிடையே, இன்றைய தினம் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது. இதுகுறித்து நடிகரும் பிரபல இயக்குநருமான மனோ��ாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். முதல் நாள் சூட்டிங்கில் விஜய் மற்றும் லோகேஷை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர் சிறிது நேரத்திலேயே அந்த ட்வீட்டை டெலிட் செய்துள்ளார்.

காஷ்மீரில் 50 நாட்கள் சூட்டிங்
சென்னையில் துவங்கியுள்ள தளபதி 67 படத்தின் சூட்டிங் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அங்கு சூட்டிங் 50 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் இணையவுள்ளதாகவும் சூர்யா, கார்த்தி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படும்நிலையில், இது சாத்தியப்படும் நிலையில் படம் மிகப்பெரிய பிளாக்��ஸ்டராக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.