»   »  தேர்தல் காரணமாக முன்கூட்டி வெளியாகிறதா விஜய்யின் 'தெறி' ?

தேர்தல் காரணமாக முன்கூட்டி வெளியாகிறதா விஜய்யின் 'தெறி' ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருகின்ற 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் காரணமாக 'தெறி' திரைப்படத்தை முன்கூட்டியே வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

'ராஜா ராணி' புகழ் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதில் சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.


இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சட்டமன்றத் தேர்தல் காரணமாக முன்கூட்டியே வெளியாகலாம் என்று செய்திகள் அடிபடுகின்றன.


தெறி

தெறி

'ராஜா ராணி' புகழ் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் தெறி.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கவிருக்கின்றனர். .


போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

இந்தப் படத்தில் விஜய் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தில் சமந்தா டாக்டராக நடித்திருக்கிறார்.


சட்டமன்றத் தேர்தல்

சட்டமன்றத் தேர்தல்

வருகின்ற தமிழ்ப்புத்தாண்டில் இப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இப்படம் வெளியாகும் நேரத்தில் சட்டமன்றத் தேர்தலும் வருகிறது. அந்த நேரத்தில் மக்கள் தேர்தலில் ஆர்வம் காட்டுவார்களே தவிர வேறு பிறவற்றில் ஆர்வம் காமிப்பது கடினம். இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருக்கிறது என்ற எண்ணம் படக்குழுவினர் மனதில் தோன்றியிருக்கிறது.இதனால் படத்தை முன்கூட்டியே வெளியிட வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.


2 வழிகள்

2 வழிகள்

தற்போது தயாரிப்பாளர் தாணு கரங்களில் 2 வழிகள் இருக்கிறது. ஒன்று பட வெளியீட்டை தள்ளி வைப்பது, அல்லது முன்கூட்டியே வெளியிடுவது. ஆனால் படத்தைத் தள்ளி வைத்தால் அது கபாலி படத்தைப் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் படத்தை முன்கூட்டி வெளியிடுவதைத் தவிர தாணுவிற்கு வேறு வழியில்லை.


மார்ச் முடிவில்

மார்ச் முடிவில்

இதனால் படத்தை மார்ச் மாத இறுதியில் வெளியிட தாணு முடிவு செய்திருக்கிறாராம். பெரும்பாலான பொதுத் தேர்வுகளும் மார்ச் கடைசியில் முடிந்து விடும் என்பதை இதற்கான காரணமாக குறிப்பிடுகின்றனர்.


டீசர்

டீசர்

படத்தின் முதல் டீசர் வருகின்ற குடியரசு தினத்தில் வெளியாகலாம் என்ற சூழ்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியையும் டீசருடன் சேர்த்து அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


English summary
Sources Said Due to Tamil Nadu Elections in 2016, Theri film Crew has Decided to Release Advance This Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil