»   »  இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பது உங்கள் விஜய்...'தெறி'க்க விடும் நெட்டிசன்கள்

இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பது உங்கள் விஜய்...'தெறி'க்க விடும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நள்ளிரவில் வெளியான தெறி படத்தின் டீசரை ரசிகர்களைப் போலவே நெட்டிசன்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அவர்களுக்கு ஏற்ற மாதிரி ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பாடலுடன் டீசரை வெளியிட்டு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார் அட்லீ.


இதற்காகவே காத்திருந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் விடுவார்களா? 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரின் ஒவ்வொரு காட்சியையும் மற்ற படங்களுடன் ஒப்பிட்டு தாளித்து விட்டனர்.


அதிலும் யூடியூபில் டீசர் காணாமல் போனது தான் தாமதம் எக்கச்சக்கமான மீம்ஸ்களை வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதற்காக விடியக் விடியக் கண்விழித்து மீம்ஸ் உருவாக்கி இருப்பார்கள் போல.


பாகுபலியையும்

கடைசியில பாகுபலியையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கறதெல்லாம் ரொம்ப ஓவர் தான்


டீசர பார்த்தவங்களை

"தெறி டீசர பார்த்து ரசிச்சவங்கள விட தெறிச்சு ஓடுனவங்க தா அதிகமாம்" என்று பதிவிட்டிருக்கிறார் திவாகர்.


இந்த பாடலை

"ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்" யாரு பார்த்த வேலைடா இது என்று கேட்டிருக்கிறார் அரபத் ரகுமான்.


டீசரைக் காணோம்

யூடியூபில் டீசர் காணாமல் போன செய்தி அறிந்ததும் "ஐயா 100K+ லைக்ஸ் வாங்குன டீசர் யா.... நைட்டு பூரா உக்காந்து லைக் பட்டன அமுத்துனோம் யா..." என்று கிண்டலுடன் பதிவிட்டிருக்கிறார் அபிமன்யு.


50 நொடிக்கே இப்படியா?

டீசர் முழுவதும் வரக்கூடிய காட்சிகளை போட்டு ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு படத்துடன் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார் சைனத்.


பிரசார பீரங்கி

தெறி டீசரில் விஜய் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு "எங்க அண்ணே திமுக-காக பிரச்சார பீரங்கியா மாறின போட்டோ" என்று கலாய்த்திருக்கிறார் சிவா.


முழுசா சத்ரியனை

சந்திரமுகி படத்தில முழுசா சந்திரமுகியா மாறியிருக்கிற உன் மனைவி கங்காவைப் பார்னு ரஜினி, பிரபுகிட்ட சொல்வார். அதே மாதிரி "பார் முழுசா சத்ரியனை காப்பி பேஸ்ட்டாக செதுக்கிய தெறி டீசரை பார்...! என்று மீம்ஸ் போட்டு மகிழ்ந்திருக்கிறார் அருண் ராஜ்.


இதைப்போல இன்னும் ஏராளமான மீம்ஸ்களை யோசித்து உருவாக்கி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.English summary
Vijay-Atlee's Combo Theri First Look Teaser Released Yesterday Midnight - Related Memes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil