விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி ட்ரீட்… ஒன்னு இல்ல ரெண்டு… அதுவும் அல்டிமேட் அப்டேட்

சென்னை: விஜய் நடிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67'ல் நடிக்கிறார் விஜய்.

இந்நிலையில் வரும் தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்காக இரண்டு ஸ்பெஷல் விருந்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு பொங்கல்

வாரிசு பொங்கல்

வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் நேரடியாக தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கத்து. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், முக்கியமான கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். வாரிசு படத்தில் சரத்குமாரின் மூன்றாவது மகனாக விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆல்தோட்ட பூபதி

ஆல்தோட்ட பூபதி

வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். முதன்முறையாக விஜய் படத்திற்கு தமன் இசையமைப்பது ரசிகர்களிடம் கோலிவுட், டோலிவுட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும், விஜய்யின் யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாட;லின் ரீமிக்ஸ் தான் வாரிசு முதல் பாடலாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. விஜய்யும் சிம்ரனும் அல்டிமேட்டாக ஆட்டம் போட்ட ஆல்தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸை கேக்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

அடுத்து தளபதி 67

அடுத்து தளபதி 67

கனகராஜ்

தீபாவளிக்கு மோஷன் போஸ்டர்?

தீபாவளிக்கு மோஷன் போஸ்டர்?

தளபதி 67 லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனை தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு கொடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதுவும் தரமான மோஷன் போஸ்டரோடு தளபதி 67 அபிஸியல் அப்டேட்டை கொடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள், தளபதி 67 மோஷன் போஸ்டர் என இந்த வருடம் தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு டபுள் தமாக்காவாக இருக்கப் போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X