»   »  வெளியானது விஜயின் 'பைரவா' டீசர்! அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்கள் குஷி #Bairavaa

வெளியானது விஜயின் 'பைரவா' டீசர்! அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்கள் குஷி #Bairavaa

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பைரவா' டீசர் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது. இது இளையதளபதி என ரசிகர்களால் புகழப்படும் விஜய்க்கு 60வது திரைப்படம் என்பது சிறப்பு. பஞ்ச் டயலாக்குகளுடன், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைந்துள்ளது டீசர். இது விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படமாக இருக்கும் என்று சோஷியல் மீடியாவில் டாக் ஓட ஆரம்பித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஏற்கனவே விஜயை வைத்து அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கியவரான பரதன் இயக்கியுள்ளார். நள்ளிரவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த டீசர் முன்கூட்டியே வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Vijay starer Bairavaa Official Teaser released

பைரவா டீசர்:

இதனிடையே ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள எஸ்-3 திரைப்பட மோஷன் போஸ்டர் இன்று நள்ளிரவில் வெளியாக உள்ளது. திரைப்பட ரசிகர்களுக்கு இந்த அதிரடி வெளியீடுகள் தீபாவளி பரிசாக அமைந்துள்ளன.

English summary
Vijay starer Bairavaa film's Official teaser released on October 27.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil