Friends Rerelease: கான்ட்ராக்டர் நேசமணியை காண ரெடியா?.. விஜய், சூர்யாவின் ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் தேதி!

சென்னை: நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி நேற்று வெளியான 'காட் மோட்' ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டின் போதும் அறிவிக்கவில்லையே என ஃபீல் பண்ணிக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு விஜய், சூர்யா இணைந்து நடித்த "ஃப்ரண்ட்ஸ்" திரைப்படம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக போகிறது என்கிற அறிவிப்பு ரிலீஸ் தேதியுடன் வந்துள்ளது.

மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் 2001-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ப்ரண்ட்ஸ் திரைப்படம், வரும் நவம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்த வருகிறது.

Vijay Suriya and Vadivelu s epic comedy movie Friends Re Release date announced
Photo Credit:

கொரோனா காலக்கட்டத்திலேயே கான்ட்ராக்டர் நேசமணி திடீரென டிரெண்டாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில், 4கே தொழில்நுட்பத்தில் ப்ரண்ட்ஸ் திரைப்படம் வெளியானால் தியேட்டர்களில் காமெடி சரவெடி தான் என்கின்றனர்.

குஷி காலி: கரூர் துயரம் மட்டும் ஏற்படாமல் இருந்தால் தியேட்டர்களில் விஜய்யின் குஷி திரைப்படம் நல்லா கல்லா கட்டியிருக்கும். ஆனால், 41 பேர் உயிரிழந்த நிலையில், கொண்டாட்டங்கள் அப்படியே குறையத் தொடங்கின. குஷி படமும் ரீ ரிலீஸில் பெரிய வெற்றிப் பெறாமல் அப்படியே காலி ஆகிவிட்டது.

ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ்: இந்தத் திரைப்படத்தில் விஜய், சூர்யாவுடன் வடிவேலு, தேவயானி, ராதாரவி, மதன்பாப், ரமேஷ் கண்ணா, சார்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளும், இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களும் முக்கியப் பங்காற்றின. நட்பு குறித்து தமிழ் சினிமாவில் ஒரு கிளாசிக் படமாக "ஃப்ரண்ட்ஸ்" இன்றும் பேசப்படுகிறது. வரும் நவம்பர் 21ம் தேதி விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படம் ரீ ரிலீஸ் ஆகிறது.

ஜன நாயகன்: இதற்கிடையில், விஜய் நடித்த "ஜனநாயகன்" திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. அடுத்த ஆண்டு ஜன நாயகன் மற்றும் சூர்யாவின் கருப்பு படங்களுக்கு இடையேயான பாக்ஸ் ஆபீஸ் மோதல் அல்லது கம்பேரிசன் ஏற்படும் சூழலில் இருவரும் இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தை இரு தரப்பு ரசிகர்களும் தியேட்டர்களில் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X