தளபதியுடன் கூட்டணி வைக்கும் தல… விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்க ரெடியான தோனி?

சென்னை: விஜய் தற்போது வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், விஜய்யும் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியும் விரைவில் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெடியாகும் வாரிசு அப்டேட்

ரெடியாகும் வாரிசு அப்டேட்

கோலிவுட்டின் வசூல் மாஸ்டர், ரசிகர்களின் தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படம், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் நடிக்கிறார் விஜய். விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தல தோனியுடன் சந்திப்பு

தல தோனியுடன் சந்திப்பு

முன்னதாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியும் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். பீஸ்ட் படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் செம்ம வைரலாகின. அப்போதே இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் சூப்பராக இருக்கும் என இருதரப்பு ரசிகர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.

பட தயாரிப்பில் தோனி

பட தயாரிப்பில் தோனி

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் தொடங்கியுள்ள இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்களை தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக 2011ல் இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை பின்னணியாகக் கொண்டு 'Blaze of Glory' என்ற படத்தையும், 'The Hidden Hindy' என்ற பெயரில் புராண கதையுடன் கூடிய படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் கூட்டணி?

விஜய்யுடன் கூட்டணி?

இந்நிலையில், இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் ஒரு பிரம்மாண்டமான படத்தை தோனி தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் தல என கொண்டாடப்படும் தோனியும், கோலிவுட் திரையுலகின் தளபதி விஜய்யும் ஒரு படத்தில் இணையவுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் விஜய்யின் 70வது படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தோனியின் ராசியான எண் 7 என்பதால், இந்த முடிவாம். ஆனாலும், இந்தப் படத்தின் இயக்குநர், எப்போது ஆரம்பிக்கப்படும் என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X